Oct 13, 2016

ராலி க. நி. தெக்காலம்  #403

ஊட்டி வளர்க்கும்

      உடம்புக்கு உள்ளேயும்

ஏட்டில் எழுதா

      மறையின் ஒலியிலும்

நாட்டியமாடும் பொருளறிய

      ராலி பேய்வாழ்

காட்டினில் ஆடுவானை

      காண்ப தெக்காலம்?

 

Gopi:

கல்லெரிந்தால் கைலாயம்.

காலைவைத்தால் கைவல்யம் .

மகனிடமிருந்து மஹாவாக்யார்த்தம்.

கட்டிப்பிடித்தால் காலனுக்கும் உதை.

பெண்ணுக்கு தன்னில் பாதி.

ஆனால் அவளுக்கோ குரு.

இவன் முரண்பாட்டின் முழு அவதாரமோ!!!

 

BKR:

புசிப்பது திருவோட்டில்

வசிப்பது சுடுகாட்டில் எனினும்

மதுரைக்கு மன்னனவன்

மலையரசன் மருகனவன்

மலர்மகள் கேள்வனாம்

மாலுக்கு ஒரே மைத்துனன்.

வேத முதல்வனுக்கு

முரண்பாடும் வேடிக்கை

 

 

 

Oct 02,2016

VKR:

தேடினான் சித்தார்த்தன் ஓடினான் வாழ்முழுதும்

கூடினான் குழந்தை பெற்றான் – புத்தரை

நாடினான் பயனில்லை மாநதியின் தோணியதில்

பாடியது என்னென்று புகல்.

 

Rali:

@கல்யாணராமன் :

மெருகேறி உள்ளதென்றீர்

    என்கவி தையில்

உருகிப்போ னேனுண்மை

    நானறிவேன் சற்றே

உருப்படியாய் நான்கவி

    தையெழுத அந்த

முருகனே தானருள

    வேண்டும்.

 

Rali:

நம்பிக்கை கொள்வதொன்

    றேபோதும் தம்பிவேறு

என்னவேண் டும்வாழ்வி

    னில்.

 

பித்தன் 62.

புத்தனின் பாடல்.

ஆதியில் அரசனாக  வேட்டையாட சென்ற நான்

பாதியிலே காலனின் வேட்டையாடும்

காட்சிகண்டு

மீதிநாளில் எனைத்தேடி அனைத்தையும்

துறந்து நின்று

போதிமரத்தடியில் நான்கண்ட உண்மை

ஏதுமில்லை ஏதுமில்லை

இருப்பிங்கு ஏதுமில்லை

இழப்பிங்கு  ஏதுமில்லை

இறப்புமிங்கு ஏதுமில்லை.

 

Gopinath M:

அலை மேல் அலைவருவதே

அசைவற்ற ஆழத்தின்

அழகான அறிகுறி.

 

 

Gopi – Aug 01, 2016

கவித்திறனில்லை.

ஆழக்கற்கவில்லை.

வாழ்த்த வயதுமில்லை.

உமதனைத்துக்கவிதை

களை களித்து திளைத்துக் களைத்தோம்.

பதினாறு கலையுடையாள்

பதியைப்பிரியாள் உம்

பதிகத்தொண்டு தன்பாதத்தில்

பதிக்கச்செய்து நற்

கதியளிக்கத் துதிப்போம்.

 

உலகைக்காக்க குடித்தான்

கருநீலக்கழுத்து பெற்றான்

வேடனானான் வில்கொடுத்தான்.

ஐவரை, ஐவரைக் கொண்டு உலகைக்காக்க

தவபங்கத்தினால் எறித்தான்.

மங்கை மதனை உயிர்ப்பித்தாள்.

தனக்குத் துணையாய்நின்றவன்

நமக்காக நம்மைப் பெற்றான்

புரமெறித்தான் நமக்காக

பதினாறு வயதுடையவனைக் காக்க

பண்ணியறியாததை செய்தான்

புகழென்னமோ இடப்பக்கத்தவளுக்கு

இவனுக்கென்று கிடைத்துதான் என்ன?