Aug 31, 2016

Rali:

சந்திரசே கர்போல்

      நமக்கும் கவிதைகள்

சந்தமாய் வந்துவிழ

      வேண்டுமென ஆறுமுகக்

கந்தவேளை வேண்டுவோம்

      நாம்.

Rali:

ராலியின் வேண்வெண் முயற்சி #4:

ஆவணிய விட்டங்

      கழித்தெட்டாம் நாளிலே

தேவகி மைந்தன்

      யசோதா வளர்நந்தன்

கோவர்த னின்பிறந்த

      நாளும் கழிந்ததும்

போவது பத்துநாள்

      போக வருவது

பாவலர் போற்றும்

      குமரனாம் தம்பியாம்

சேவற் கொடியுடையான்

      அண்ணன் கணேசனின்

சேவடி போற்றும்

      சதுர்த்தி.

Rali:

ராலியின் வேண்வெண் முயற்சி #5:

ஐங்கரனை ஆனையாய்

    ஏவியக் குறமகளை

செங்கமலக் கையா

      லணைத்து மணந்தவன்

சங்கரன் கும்பிடும்

      தம்பிசாமி முத்தமிழ்ச்

சங்கத்தி றையானே

      வாழி.

BKR: @ராலி

நீயுரைத்த கருத்தையே சற்றுச் சுருக்கித் தெரிவிக்க எண்ணிய என் எளிய முயற்சி – ஒரு சிறு சொல் மாற்றத்துடன் – கண்ணன் பிறக்கவில்லை, தோன்றினான். எனவே அவனுக்குப் பிறந்த நாள் இல்லை, தோன்றியநாள் தான் உண்டு என்ற என் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

மேலும் இந்தத் தொடர் நிகழ்வு இந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அதற்குரிய காலகிகுறிப்பினையும் பயன்படுத்தியுள்ளேன்.

கருத்து உபயம் – ராலி!!

முப்புரிநூல் மாற்றியபின்

       ஏகியதே

               கீதையினைச்

செப்பியதோர் சீலனவன்

        தோன்றியநாள் –

                               தப்பாது

பின்னே தொடர்கிறதே

        பாலக் குமரனவன்

முன்னவனைப் போற்றும்

                                   தினம்

Pithan:

பெரியது எது?.

மிகப்பெரியது மலை

மலையைக்காட்டிலும்

பெரியது கடல்.

கடலைக்காட்டிலும்

பெரியது ஆகாயம்.

ஆகாயத்தைக்காட்டிலும்

பெரியவர் இறைவன்.

இறைவனைக்காட்டிலும்

பெரியது மனிதனின்

ஆசை.

 

Sathish:

ஆசை

அகத்தினுள்ளே புதைந்து இருப்பது

அறம் பொருள் இன்பம் யாதுமறியாதது

அடைந்தே தீர்வதென்ற வெறிகொண்டது

அனைத்தையும் இழந்து தன்னையும் அழிக்கவல்லது

வயதறியா நஞ்சு.

 

Sathish:

தலையிலே சிதைந்த எண்ணம்

விழியிலே அமிலக் கரைசல்

உள்ளத்தே கண்யமற்ற சிந்தனை

உதட்டில் சதா நஞ்சு

நீ படைத்த மனிதச்சிறப்பிதுவோ

இல்லை யுகதர்மமோ

யாமறியேன் பராபரமே.

Sathish – Aug 27, 2016

மணி வாசகம் – 8

தாய்க்கு சேயாகி

கண்ணோடு மணியாகி

கயல்விழியாள் கரம் பிடித்து

தொடி நுதல் திலகமிட்டு

களிறிரண்டீன்றெடுத்து

கரம் பிடித்து முன் நிமிர்த்தி

கயமையாகி இறுதியில் கறையேற முன்வருங்கால்

கூடு விழும் காலமடா

யாக்கை பிரி என்பான்

கருடபுற நாயகன்

எக்கணமும் ஏகாந்தன் கண்ணனவன் நினைவுகொண்டால்

பிறவி முதல் இறுதி வரை

சதாசுகமே!

இனி கொள் எப்பிறவியாயினும் சதானந்தமே!!

 

 

Sathish – Aug 08, 2016

மணி வாசகம் – 7

புகழ் வென்ற நாகரிக வாழ்க்கையில்

கணம் மிகுந்த சிரஸின் மத்தியில்

சுருக்கென்று உறைத்த புண்ணியம்

செருக்கற்று உண் விழி முன் நின்றேன்

நின்ற நின் சேய் தலை பாரம்

இறங்கவும் வழி கொடு நீயே

கயிலையாம் மயிலையில் வாழும்

கற்பகவல்லியென் தாயே!!!