திருக்குறிப்புத் தொண்டர்

ராலியின் வேண்வெண் முயற்சி #34:

திருக்குறிப்புத் தொண்டர்

    புரியும் அரிய

திருப்பணி கண்டு

    மகிழ்ந்த பரமன்

உருப்படி காயாது

    செய்துசோ திக்கக்

கருமேகம் மின்னல்

    இடிமழை தானே

தருவித்துத் தொண்டர்

    பெருமை உலகிற்

கருளினான் தொண்டர்போல்

    என்னுள்ளே பக்தி

வருவதற் கென்ன

    வழி?

கழற்சிங்க நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #158:

உலகாளும் ஈசனது

      பூஜைக்காய்ச் சேர்த்த

மலரை முகர்ந்த

      அரசிமனை யாளின்

மலர்க்கையை வெட்ட

      கழற்சிங்கர் பாய

நலம்பட ஈசனருள்

      செய்தான்.

நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #176:

யாழ்ப்பாணர் மெய்யுருகிப்

      பாடத் தரையமரத்

தாழ்சடையன் பீடமொன்று

      போடப் பணித்தவர்

யாழிசையும் பக்தியும்

      ஏற்றவர்க்குப் பேரின்ப

வாழ்வளித்துத் தன்னுடன்

      சேர்த்தான்.