Nov 2017 – Ravindran

ஆடிய கூத்தன் காலடி

கிடந்தான் முயலகன் சிரித்தே

ஈசன் மலையாம் கயிலையை

யாட்டிய (இ)ராவண னழுதான்

பரமன் நெறித்து நசுங்கியே

பாடினான் வலியில் சாமம்

விட்டான் இமையோன் வரமுடன்

குஞ்சிதபாதம்  என்றும் நெஞ்சினில்

தேவர்க்கு மரிதாம்  பேறு

பெற்ற முயலகன் சிரித்தான்.

 

இதை செப்பனிட்டு சீராக உரமேற்றி உருவாக்கியவர் , புலவர் SKC.  இதோ:

ஆடிய கூத்தன் அரனின் காலடி

நாடிய முயலகன் நாளும் மகிழ சாமம்

பாடிய தசமுகன் பரமன் அழுத்த

வாடினன் அங்கு வரமது பெற்றவன்

ஆடிய பாதம் அம்பலம் கண்டு

நாடியவன் அன்றோ? நவில்வீர் நீரே.

 

ஆதவனைக் காணவில்லை

ஆனால் மழை உண்டு

கவிதைகளைக் காணவில்லை

ஆனால் மவுனம் உண்டு

காணோமே

கவிராயர்களை

ஒரு வாரமாய்

தருவீரைய்யா கவிதை மழை

 

 

Advertisements

Oct 2017 – Ravindran

காது பிளந்தது வெடி

ஓசையிலே வீதி நிரம்பியது

வெடிக் குப்பையாலே வானம்

மறைந்தது மாயப் புகையாலே

வயிறு முட்டியது அளவறியாம

லுண்ட  தின்பண்டத்தாலே

மன முவகை கொண்டது அணிந்த  புது  உடையாலே களிப்பு

வந்தததெம் நண்பர் கூட்டத்தாலே   ஆயிரமா யிரம் ஆண்டாண்டாய் உவகை யோங்கி இன்பம் பொங்கிட வந்ததே தீபாவளி!

ஒளிமிகு நன்னாளா மிது

இன்பம் பொங்கும் தீபாவளி!  சிறுவர் மகிழ்ந் தாடியோடிட

வந்திடு மானந்த தீபாவளி!

 

நற்றமிழ் பெற்ற திருமகன் இட்ட

பொற்றமிழ்ப் பாவும்

ஏற்றமிகு பாவணுரு

முற்ற  பெறுஞ் செல்வ மெலா

பெற்று வாழியவே.

 

சினமிகு  அரக்கர்தரு இடரினைக் களைய  மறையவர் தேவரும் கசிந்துருகித் துதித்திட  வண்டுரு தரித்து  ஆங்கார ரீங்காரமொடு அசுரரையன்று அடிப்பொடி யாக்கிய ப்ரமராம்பா உன்னடி பணிந்தேன் தயைபுரி தாயே.

உய்ந்திட  சிந்தனை செய்திலேன் உனை மறந்தேன் கட்டவிழ்த்து விட்ட கள்ளப் புலக் குரம்பை வசமானேன் மாறிலேன் மீட்டருள் தயைபுரி தாயே.

பெருங்கடலில் சிதறுண்ட சிறுதுரும்பு உயிரனைத்தும் உய்ந்திட கடைக் கண்ணசைத்து காத்திடுவாய் குற்றம் பொருத்தருள் தயைபுரி தாயே.

மனமது தினமுனை நனவிலுங் கனவிலு தொழுதிட மாயை மறைத்த பெருஞ் சோதியை அறிந்த பின்னடியேன தனுடன் இணைந்திட தயை புரி தாயே.

 

 

Sep 2017 – Ravindran

‌நள்ளிரவு நட்டமாடும் தில்லைநாதன் மைந்தனோ

மாங்கனி கிட்டா வருத்தமுற் றாண்டியாய்த் துணியுதறித் தண்டமுடன்   குன்றில் நின்ற கோவணதாரி குமரன் தழிழ்காத்த  சிறுபிள்ளை   ப்ரணவம் ஓதுவித்த தகப்பன் சாமி வேலேந்தும் தேவர் தளபதி அப்பனோ

மேனியுடன் பிட்சாடனாய்  தெருவெங்கும்  திரிந்த திரிபுர மெரித்த பித்தனா னந்தன்

பிரமன் தலை கொய்த சுடலைவாசி சூலமொடு  மூத்தோன் தலைசீவி வேழத்தலை  பொருத்திய பெரியோன்

மங்கை கங்கை பிறை சூடிய பெருமான் மலைமகளுக் கொருபாதி மாலனுக்கு மறுபாதி யளித்த மறையோன்

அரியோன் அடியார்க் கருள்வாய் விரைவாய் கருணைபுரி சிவா.