SKC – Jul 13, 2016

தேடிச் சோறு நிதம் தின்று

கூடிக் கலவியில் தனை மறந்து

மூடிக் கிடக்கும் மெய்ஞ்ஞானத்தை

சாடித் திரிவோர் சார்பிருந்து

ஓடி உழைத்து ஊண்மறந்து பொருள்

நாடியே நாளும் நலிவடைந்து

வாடியிவ் வாழ்வை வையகத்தில்

வேடிக்கையாய் வாழ்ந்திருந்து

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை

பாடித் துதித்தே பணிந்திலனே!

 

 

கரிமா முகனாம்

கணபதி யவனும்

அரிமால் மருகன்

அழகன் உடனும்

பரிமேல் அழகன்

பர நாரணனும்

பரியாய் நரியைப்

பணித்தே அருள்செய்

சரிபாதி உமை

சங்கரனைத் தொழ

புரியா வழியில்

புண்ணியந் தேடி

மரியா நிலைக்கு

மனமே ஏங்க

பரிவாய் அருளப்

பதம் பணிந்திலனே!

Advertisements

Rali – May 06, 2016

ராலி க. நி. தெக்காலம்  #168

படமெடுத்துப் பல காட்சியைப்

    பார்த்து ரசித்து ஒரு

இடம் விடாது தினம் ஊர்ச்சேதி

    முனைந்து படித்து

திடமாயிருந்து ஒரு நாள் படுத்துச்

    சாகாது இடுகாடில்

நடமாடுவானை ராலி விரும்பி

    நம்புவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #169

பலர் மனதைப் புண்ணாக்கிப்

    பணம் சேர்த்து

உலர்ந்து சற்று மீரமிலாகல்

    மனம் கொண்டு

இலர் சிலருக்கும் ஈயாது

    சாவார் போலிராது

அலர்மேல் மங்கையை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #170

பங்குச் சந்தையில் தினம்

    பணம் சேர்த்தழித்து

இங்கும் அங்கும் அற்ப

    சுகம் தேடி அலைந்து

தங்கும் புண்யம் சேர்க்காது

    மடிவார் போலிராது

சங்கு தாங்குவானை ராலி

    தேடுவ தெக்காலம்?

Rali – Apr 06, 2016

ராலி க. நி. தெக்காலம்  #111

இல்வாழ்க்கை ஒழுக்கம் உரைக்கும்

    சாத்திரம் மறுத்து

அல்லும் பகலும் மண்பொன் தேடிப்

    பேயாய் அலைந்து

பல்லும் போன பின்னும் அற்பசுகம்

    தேடுவார் போலிராது

வில்வ இலை நிலை திருமகளை

ராலி நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #112

புதுவீடும் வண்டியும் புதுத்

    துணியும் பொருளும் கூடா

மதுச்சுவையும் மந்தமதி தரும்

    சிறு திரைக் காட்சியும்

இது எதுவும் பிறவிப்

    பயனுக்குதவா எனக் கருதி

மதுசூதனன் மாணடி ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #113

மாசி மாதம் ப்ரம்ம

    உபதேசம் வாங்கி

வீசி முப்புரி நூலை

    எறிந்து சாத்திரம்

ஏசி வீணே பிறவி

    யழிப்பார் போலிராது

காசி நாதனடி ராலி

    கருதுவ தெக்காலம்?