Jun 2017 – GRS

செல்லும் திசை சொல்லி நிலை

நில்லும் முறை ஓதி – வெல்லும்

வினை பயிற்று வல்லூழ் வடித்து

எனை காத்தாய் அம்மே

Advertisements

Apr 2017 – GRS

ஞாலம் கருதி நயந்த கருமம்

சீலம் ஒழுகி செயின் -ஆலம்

தேடி உண்ட அரனருள் அன்பில்

கூடி வரும் கனிந்து

 

ஓயா கால வெளியில் ஓடி

ஓயும் வாழ்வின் ஓசை – ஓயா

உள்ள அதீதம் உணர ஹேவிளம்பி

உள்ளம் உணர்த்து நீ