Nov 05, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #136:

அப்பாவும் அம்மாவும்

      உன்னையே ஏய்த்தனர்

தப்பாது கேள்பழம்

      வாங்கித் தருவேன்நான்

தப்பாய்க் கவியெழுதும்

      என்னைப் பழனிமலை

அப்பாநீ கைவிடா

      தே.

(அண்டமாடிடும் ஆதிமகள் நம்மன்னை பராசக்தி அருட்சுடர் வேல்முருகனை நாமெல்லாம் போற்றும் கந்தசஷ்டி இன்று)

 

பித்தன் 92.

உமை ஏய்த்த உமையிடம் வேல் வாங்கி நின்றாய்

உமை ஏய்த்த தந்தைக்கு வேதப் பொருள் அளித்தாய்

எமை ஏய்த்து வாழும் இம்  மாயப்பிறவிதனில்

சுமையின்றி வாழ்ந்திட அருளிடுவாய் கந்தனே

வளர்மதி ஆறாம் இந்நன்னாளில் எமை

வளமாக வாழ்ந்திட வாழ்த்தியருள் புரிந்திடுவாய்.

 

பித்தன் 93.

தப்பாய்க்கவி எழுதினும் ராலியின் வாழ்வில்

முற்பிறவிப் பயனால் தப்பின்றி வாழவும்

எப்பொதும் துணையான நற்பாதி மனையாளும்

தப்பேதும் தெரியாத நன்மகனும் மகளும்

எப்பொதும் வாழ்த்திட அப்பாவும் அம்மாவும்

உடனிருக்க அருளிய சுப்பிரமணியனே

உனக்கு நன்றிகள் கோடானு கோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #137:

அரோகரா கந்தனுக்

      கென்றிடுவோ ரஞ்சு

வரோவாழ்வில் என்றுமெதற்

      கும்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #138:

அரோகரா கந்தனுக்

      கென்றிடுவோ ரெண்ணு

வரோவாழ்வில் என்றும்

      துயர்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #139:

அரோகரா கந்தனுக்

      கென்றிடுவோர் கெஞ்சு

வரோவாழ்வில் கந்தனை

      அன்றி?

 

பித்தன் 94.

கந்தனுக் கரோஹரா

     என்றிடுவோர் நெஞ்சு

வெந்தபின்பும்

     சென்றடையும்

கந்தனைப் போல் பஞ்சு.

 

 

Nov 04, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #131:

வள்ளிக் கருள்செய்ய

      கள்ளத் தனமாகத்

தள்ளாடும் மூத்தோனாய்ச்

      சென்று மருவினாய்

உள்ளத்து உன்னை

      இருத்துவோரைக் காத்திட

வள்ளலே நீஎதுவும்

      செய்வாய்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #132:

நினைப்பது எல்லாம்

      நடக்குமா என்ன?

நினைப்பது வீணென்

      றறிவாய் எதையோ

நினைப்பதற் குச்சாவு

      என்றுவரும் என்றே

நினைப்பது நன்மை

      தரும்.

(From The Tibetan Book of Living & Dying)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #133:

பிறர்மகிழ ஆசைப்படு

      ஆனந்தம் அதிலே

பிறப்பது நீமகிழ

      ஆசைப் படவும்

பிறப்பது துன்பமென்

      றறி.

(From The Tibetan Book of Living & Dying)

 

SKC:

சிக்கலில் வேல் கொண்ட

சிங்கார வேலன்

செந்தூரில் வதம் செய்த

சீரலை நாதன்

பக்கமே தெய்வானை

பரங் குன்றம் மணமுடித்து

திக்கெட்டும் தேவர்

துயர் தீர்த்த தோழன்

செக்காய்ச் சுழன்று

சேருமிட மறியா எம்

சிக்கலைத் தீர்க்கும்

சிவகுரு நாதன்

சுக்குமிகு மருந்தில்லை

சுப்பிர மணியனை

மிக்கதோர் இறையில்லை

மேதினியில் என்றே

எக்கணமும் எனக்கருள்

ஏந்தலடி பணிவேன்

 

Rali:

ராலி க. நி. தெக்காலம்  #412

ஓடும் காலமஞ்சி

      கருத்துடன் தினம்

விடுபேறு தரும்

      வேதவிதிவாழ் முறை

நாடும் மனங்கொண்டு

      நடக்க வெண்மதி

சூடுமைந்தனை ராலி

      சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #413

அடுத்துவரும் பிறவியிலும்

      அறமல்லது அறவே

விடுத்து வேதவிதிவழி

      நடந்து மறைவாய்தானம்

கொடுத்து அரியதாம்

      பக்திபெற ராலி கைலாயம்

எடுத்தானை கடுத்தானை

      தேடுவ தெக்காலம்?

Nov 03, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #129:

பாண்டியன் கேட்டதும்

      கால்மாற்றி ஆடினாய்

ஆண்டவா ஆடல்

      நிறுத்திப் படுப்பதே

நீண்டவோய்வு என்கிறேன்

      நான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #130:

கடைசிப் படுக்கையில்

      மேனி கிடக்க

கடைசி வசனங்கள்

      காதினில் கேட்க

கடைசி நினைவை

      மனம்பார்க்கும் காட்சி

நடைபெறுதல் என்று

      நமக்கு?

(From The Tibetan Book of Living & Dying)

 

பித்தன் 91.

அடடா மழைடா அடமழைடா

எடுடாஎடுடா குடையெடுடா

நடடாநடா மெல்லநடடா

வடைடாவடைடா

சூடுவடைடா

எடுடாஎடுடா காசுஎடுடா

புடிடாபுடிடா வடைபுடிடா

கடிடாகடிடா வடைகடிடா

சசசும்மாசுகம்டா

இதுதான் சுகம்டா.

(நேற்று சென்னையில்   மழையாம்)

 

SKC:

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ஞானமே

பட்டதும் பற்றதும் திட்டமாய்த் தீருமே

சட்டையாம் உடல் சுட்டதும் போகுமே

விட்டதும் இவ்வுயிர் விட்டிடும் ஞாலமே

சட்டெனப் பற்றிடும் சண்முகன் பாதமே.