Rali – May 27, 2016

ராலி க. நி. தெக்காலம்  #222

உள்ளம் மண்பெண் பொன்னில்

    புதைத்து சொத்து

அள்ளலில் பேராசை சற்றும்

    அடங்காது பெரும்

வெள்ளமெனப் பெருகி மதி

    அழிக்கும் முன் ராலி

கள்ளன் அழகன் கழலடி

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #223

கரணம் போட்டாயினும்

    மண்பொன் சேர்த்து

மரணம் என்பதை மறந்து

    உள்ளே அந்தக்

கரணம் அனைத்தும்

    கெடுத்துச் செத்திராது

சரணம் ஐயப்பாவென ராலி

    சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #224

வான் தொடும் பேரா

    சையும் துர்மதியும்

நான் எனது எனும்

    மமதையும் மட்டும்

தான் வாழ்வு எனும்

    மூடனாயிராது ராலி

நான்முகன் நாயகியை

    நண்ணுவ தெக்காலம்?