SKC – Jun 15, 2016

ஆனை கண்டு

அஞ்சி நடுங்கியத்

தானை நெருங்கித்

தானே தழுவி

தேனும் தினையும்

தின்னத் தந்த பெண்

மானைத் துதித்து

மகிழ்தலும் இலனே!

Rali: @SKC –

உன் கவியில் மயங்கி அதில், உன் அனுமதி இல்லாமல், கொஞ்சம் கூட்டியது இதோ:

 

சேனை முதல்வன்

தேவி புதல்வன்

மானை விரட்டிய

மாலோன் மருகன்

ஊனை உருக்கும்

தமிழின் தலைவன்

பானை வயிறனை

வேண்ட அவரிளை

யோனை காக்க

மாறி மதமான

ஆனை கண்டு

அஞ்சி நடுங்கியத்

தானை நெருங்கித்

தானே தழுவி

தேனும் தினையும்

தின்னத் தந்த பெண்

மானைத் துதித்து

மகிழ்தலும் இலனே!

Advertisements