Rali – May 27, 2016

ராலி க. நி. தெக்காலம்  #222

உள்ளம் மண்பெண் பொன்னில்

    புதைத்து சொத்து

அள்ளலில் பேராசை சற்றும்

    அடங்காது பெரும்

வெள்ளமெனப் பெருகி மதி

    அழிக்கும் முன் ராலி

கள்ளன் அழகன் கழலடி

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #223

கரணம் போட்டாயினும்

    மண்பொன் சேர்த்து

மரணம் என்பதை மறந்து

    உள்ளே அந்தக்

கரணம் அனைத்தும்

    கெடுத்துச் செத்திராது

சரணம் ஐயப்பாவென ராலி

    சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #224

வான் தொடும் பேரா

    சையும் துர்மதியும்

நான் எனது எனும்

    மமதையும் மட்டும்

தான் வாழ்வு எனும்

    மூடனாயிராது ராலி

நான்முகன் நாயகியை

    நண்ணுவ தெக்காலம்?

SKC – May 05, 2016

நாவினிலே கலைமகளும்

நற்றமிழாய் உடனிருக்க

ஏவியிங்கு புனைகவிதை

என்றென்னைப் பணித்திருக்க

தேவியவள் புகழ் எண்

திசையெங்கும் நிறைந்திருக்க மலர்

தூவியவள் பாதம்

துதித்திருப்பேன் எந்நாளும்.

 

நயனமும் இமைகள் மூட

நாரதர் துதித்திருக்க

அயனவன் அருகமற

அலைமகள் அரவணைக்க

சயனமும் கொண்ட பெம்மான்

சரவணன்தன் அம்மான்

தயவினை வேண்டி நின்றவன்

தாளடி பணிந்திலனே.

Rali – Mar 07, 2016

ராலி க. நி. தெக்காலம்  #64

ஆணி அறைந்தாற் போல்

    சொல்லும் சாத்திரம் துறந்து

வீணில் போது போக்கி

    சொத்து சேர்த்துக் காத்திராது

சாணியாகும் செல்வம் உயிர்

    போகையிலென உணர்ந்து

வாணி தேவி கலைமகளை

    ராலி வாழ்த்துவ தெக்காலம்?