Rali – Dec 20, 2015

ராலி க. நி. தெக்காலம்  #57

எல்லாம் அறிந்தாற் போல்

    கதை பேசுவார் ஒன்றும்

கல்லாது சாத்திரம் இகழ்ந்து

    ரைப்பார் ஒரு விவேகம்

இல்லாது அற்பமாய் வாழ்

    வாரை ராலி துறந்து விக்னம்

எல்லாம் உடைக்கும் ஏக

    தந்தனை எண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #58

ஊரை எல்லாம் மேய்ந்து

    அற்ப சேதிகள் அறிந்து

யாரைப் பழகலாமாகாது

    எனும் தரமிலாது பழகி

பேரைக் கெடுத்துப் பிறவிப்

    பயன் அழித்திராது கங்கை

நீரை முடியில் கொண்டானை

    ராலி நினைப்ப தெக்காலம்?

Advertisements

Rali – Dec 18, 2015

ராலி க. நி. தெக்காலம்  #55

காணாதது கண்டாற் போல்

    பெய்தபெரும் பேய்மழை

பேணாதிருந்த ஏரிவழி யெல்லாம்

    உடைத்து எல்லாம்

வீணாய்ப் போக போதுமிதென

    நிறுத்திய பெண்ணோடு

ஆணாகிய பெம்மானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #56

ஆதி காலப் பெரியோர்

    நற்சொல் துறந்து

சாதி ஏது என்று நம்

    சாத்திரச்சொல் மறுத்து

மீதி மனுநீதி வெறுத்து

    மூடனாய் வாழாது

ஆதி மூலம் அனந்தனை

    ராலி அண்டுவ தெக்காலம்?

Rali – Dec 17, 2015

ராலி க. நி. தெக்காலம்  #53

பற்றாது தண்ணீரென

    வாடிய இம்மாந்தரின்

வற்றாத கர்மவினை

    மறந்து நீர்நிலையெலாம்

வற்றாதினியென மாமழை

    தந்து உணர்த்திய

குற்றாலத்துக் கூத்தனை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #54

சேனை எல்லாம் திரண்டு

    வந்து தவிக்கும் மக்கள்

பானை பாய் உடைமை

    எல்லாம் விரைந்து காக்க

வானைப் பிளந்து மீண்டும்

    பெருமாரி வாராது காத்த

ஆனைக்கா வாழ் அண்ணலை

    ராலி அண்டுவ தெக்காலம்?