Rali – Mar 26, 2016

ராலி க. நி. தெக்காலம்  #93

காலம் போவது மறந்து

    சாத்திரம்சொல் ஒழுக்கம்

ஏலம் விட்டுத் துறந்து இருள்

    நரகைக் கடக்கத் தகும்

பாலம் புண்யகர்மா

    துறந்து வாழ்ந்திராது ராலி

ஆலங்காட்டு அண்ணலை

    அணுகுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #94

சொந்த பந்தமே சதமென

    கூடி உறவாடி

எந்தவித அறமும் வேத

    வழி செய்யாது

மந்தமதியுடன் மடியாது

    மண் அளந்த

அந்தணனை ராலி

    அர்ச்சிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #95

ஓலமிட்டு அழுதாலும்

    விடாது கொல்லும்

காலன் வந்தழைக்கும்

    காலமறி யோமெனும்

ஞாலம் புகழும் சான்றோர்

    வழிசென்று ராலி

ஆலகாலம் உண்டானை

    உணர்வ தெக்காலம்?

Advertisements

Rali – Mar 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #90

திங்காமல் விடுவதில்லை

    என தீனி தேடி உள்ளொளி

மங்காமல் விடுவதில்லை என

    ஒழுக்கமழித்துப் புண்யம்

தங்காமல் பிறவிப் பயனழித்து

    வாழ்ந்து மடியாது ராலி

கங்காதரன் கிரிஜா மன்னனைப்

    பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #91

கற்றதில் வேதம் சொல் நல்

    வழி அனைத்தும் துறந்து

மற்றதில் மனம் கொண்டு

    மதி கெட்டுச் சற்றும் புண்யம்

அற்றதில் நாட்டம் கொண்டு

    வாழ்ந்திராது கந்தனைப்

பெற்றதில் பங்கினனை

    ராலி பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #92

காசில் கருத்தும் அரசியல்

    அற்பசேதி எனும்

தூசில் மனமும் புதைத்து

    வேதவழி சான்றோர்

வாசம் அறியாது பிறவி

    அழித்து வாழாது ராலி

ஈசன் எந்தை இணையடி

    ஏத்துவ தெக்காலம்?

Rali – Mar 24, 2016

ராலி க. நி. தெக்காலம்  #87

காரண மேதுமின்றி

    சாத்திரவழி துறந்து

பூரண கவனமும் பொன்

    பொருளில் வைத்து

ஓரணா பெறா இச்சரீரம்

    வளர்த்திராது ராலி

வாரண முகத்தோனை

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #88

அடம் பிடித்தாயினும்

    உயர்வு தரா உயர்கல்வி

கடன் பட்டாயினும்

    படித்து நல்வழிக்கு

உடன் பாடிலா வாழ்வு

    வாழ்ந்திராது

வடபத்ரசாயியை ராலி

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #89

வலியேதும் இலாது அற்ப

    சுகம் வேண்டி நல்வேத

ஒலியேதும் கேளாது பொருள்

    சேர்க்கும் கலையில்

புலியான கீழோர் சங்கம்

    நாடி வாழ்ந்திராது ராலி

கலியுக வரதனைக் காஞ்சியில்

    காண்ப தெக்காலம்?