Apr – 2017 Pithan

வேண்டாப் பொருளகளை

ஏற்ற நல்லீசனை

வேண்டித் தவமிருந்தாள்

வையத்து நாயகி

மாண்டவர் வாழ்வில்

மீண்டும் நலம்பெற

அண்டி மாயமாய்

அடைந்திட்டாள்  ஈசனுள்

ஈண்டும் நாம் நலம்பெற

வேண்டுவோ மன்னையை.

 

 

தள்ளிடுவோம் துர்முகியை

தயவுட னின்றிரவே

மெல்லநடை நடந்துவரு

மேவிளம்பி யாண்டினை

சொல்லமுதக் கவிதையை

செல்லமா யுதிர்த்து

வெல்லமுடன் வேப்பம்பூ

விருந்து முண்டு

நல்லபடி நலம்பெறுவோம்

நயமான கவிஞர்களே.

 

 

ஆண்டவனளித்த ஆயுளில்

அரைபாகம் நித்திரையில்

தாண்டித் தாவிய

தன்னிளமை சிலகாலம்

கண்போன்ற கல்விக்கு

கடந்தன காலம்சில

கண்போன்ற மனைவியை

கொஞ்சியது சிலகாலம்

மாண்டுவிடும் பயத்தினில்

மூப்புநரை முதிர்காலம்

ஆண்டவனை நினைத்திட்ட

ஆண்டுக ளெக்காலம்.

 

 

பாலிலே தயிருண்டு

பாரோ ரறிந்திடுவர்

ஆலிலைக் கண்ணனுக்கு

அதிலே வெண்ணையாம்

கூலியாக கையிலேந்தி

கோமாதா பின்சென்று

நூலிழை வேதமான

கீதையை யளித்திட்டான்

வேலியாக அதையேற்று

வாழ்வாங்கு வாழலாம்.

 

 

கல்லாலடியிலமர்ந்து

கட்டை மோன மாய்

நல்லோர் சீடர்கள்

நான்குபே ரிருக்க

சொல்லாமல் சொல்லி

சத்தியம் விளக்கி

எல்லோரும் இன்புற

அருளிய சங்கரா

பல்கோடி நன்றிகள்

பகர்ந்தோ மின்னாளில்

Advertisements

Mar- 2017 Pithan

நலமென்றால் நலமே

நலமில்லை என்றாலும் நலமே

பிலம்வாழ் காமாட்சி பார்வை பதித்திட்டால்

நலமே என்றும் நலமே.

 

 

பிறவிகள் பலகடந்தேன்

பெற்றபயன்  ஏதுமில்லை

இரவினில்கண்   துயின்றால்

எழுவதென்   கையிலில்லை

குறவர்கள் நட்டசோளம்

நெஞ்சினிலே  பதியவில்லை

கறந்தபால் மடியேற

கருணைசெய்வாய்  கந்தவேளே.

 

 

சங்கு உன் கையினிலே

சக்கரமும் கையினிலே

இங்கிவ்வுலக இயக்கமுன்  கையினிலே

பங்குபெற்ற தேவர்களின்

அமுதமுன் கையினிலே

ஏங்கித் தவிக்கும் என்

இதயமுன் கையினிலே

தாங்கிப் பிடித்திடுவாய்

தாரகஸ்ரீ ராமனே.

 

 

சனிமாலை வேளையிலே

ஸதிராடிய சிவனே

தனிமையில் ஆடியதால்

காலுனக்கு நோகுமோ

இனிமேல்நீ சிலகாலம்

அரங்கனுடன்  உறங்கிடுவாய்

பனிமலையில்   குளிர்ந்திடும்

பரமேசா சரணம்.

 

 

வாழ்ந்தவரை    போதுமைய்யா

வயலூர் முருகையா

பாழ்மனத்தை   அடக்கியாள

பக்குவமில்லையைய்யா

வீழ்ந்துவிடும் நாளிலே

வழித்துணை நீயைய்யா

தாழ்சடையோன் மகனே

தாங்கியெனைப்  பிடியுமைய்யா.

 

 

வாட்டி வதைக்கும்   வாழ்க்கையிலே

போட்டியென்ன   பொறாமையென்ன

ஈட்டி உந்தன்   தலைக்குமேலே

எட்டி எட்டி   பார்க்குது

காட்டிலுள்ள வாசியுன்னை

கைகொட்டி அழைக்கிறான்

நாட்டியத்தை நிறுத்தி விட்டு

நாதன்தாள்   சேர்ந்திடு.

 

 

கலியுகத்தி லசுரர்கள்

கலந்தனர் மனத்தினில்

வலியின்றி வாழ்ந்திட

வழியொன் றிங்குண்டு

மலிவானராம நாமம்தனை

மனதிலே கூறிட்டால்

சலிப்பின்றி வாழலாம்

சத்தியம் நம்பிடுவாய்.

Feb-2017 Pithan

 

இரவாதோசை இனி வேண்டாம்

இறவாத வரமும் பிறவா வரமும் வேண்டி

மறவாமல் மகேசனை  மண்டியிட்டு

நரனாய் இனிப்பிறவாமல்

துறவறம் பூண்டு நாம்  துன்பம் நீங்கி

வாழ்ந்திடுவோம்.

 

 

தெருநாய் கொசுப்படைக்கு   விசா அனுப்பினால்

பெருமளவில் அனுப்பி  வைக்கிறேன்.

 

சர்க்கரை வேண்டி  சாலையில் சென்றான்

நிற்க மனமின்றி  நீண்டவரிசை கண்டான்

பற்றறுத்து சுவையை  பயமின்றித் துறந்தான்

பற்றுவைத்த இல்லறத்தை  பயந்தான் துறக்க.

 

 

சர்க்கரையாய் சுவைத்தது

சம்சாரம் முதலிலே

பொற்கால மதுவென்று

பெருமை கொண்டேன்

சொற்போரில் தொடங்கி

சோதனைகள் கடந்து

பற்றறுக்க பயந்தேன்நான்

குரங்கின்வா லாப்பாக.

 

 

வான வீதியிலே

விண்மீன் வந்தது

கான மயிலாட

கவியங்கு வந்தான்

மோன எதுகையிலே

சீர்கவிதை தந்தான்

தேனமுதம் பருகிடவே

தேடிநான் வந்தேன்.

 

 

சிவனேஎன் றிருந்தவனை

பவக்கடலில் பதுக்கினாய்

நவவழிகள் வாயிலாக

சிவமாக செய்திடுவாய்

ஓம் நமசிவாய.