MAR 2017 – BKR – வெண்பா

அரவாய் அலங்கலது தோன்றினாற் போலப்

பிரமமுல காய்த்தோன்று தென்பர் – அரவை

அலங்கலது ஒக்கும் உருவில் பிரமம்

உலகினை ஒத்தவிதம் சொல்.

 

 

பாம்பும் கயிறுமே கண்டறியாப் பிள்ளையொன்று

பாம்பைக் கயிற்றில்கண்டஞ்சிடுமோ – நாமும்

பிரமம் உலகிவற்றின் தன்மையறி யோமே

மிரளுவதே னிவ்வுலகு கண்டு?

 

 

ஆலத்தை உட்கொண்டகண்டத்தால் ஆவலுடன்

ஆலவாய்ப் பிட்டையும் உண்டனையே – ஆலமுண்டு

தண்டனையாய்க் கண்டம் நெரியுற்றாய் பிட்டினை

உண்டதற்கேன் பெற்றாய் அடி?

 

 

உடுக்கை ஒலியதுவே ஓமென் றுணர்ந்தார்க்

கிடுக்கண் வருமோ பகர்வீர் – படுக்கை

அரவில் துயில்வார்க்கும் ஆனந்தம் அந்த

அரனின் உடுக்கொலியன் றோ?

 

 

இறப்பே இலாதான் விடமுண்டால் காக்க

இறைவி மிடறுபற்ற வேண்டுமோ என்னில்

முறையதுவே காணீர் எமனையவன் எற்றி

எறிந்த திடக்காலால் தான்.

 

 

நாத்திகம் இந்நாளில் வாய்ப்பேச்சே நானிலத்தில்

நாத்திகனாய் நின்றோன் ஒருவனே –  ஆர்த்த

நரஅரியை நேர்கண்டும் நம்பிக்கை கொள்ளா

இரணியன்போல் நாத்திகனைக் காட்டு.

 

 

மொழியொன்று வேண்டுமோ மௌனமாய் நோக்கப்

பொழிவான் அருளைப் பெருமான் – அழியாத

மெய்யன்பு கொண்டவர் மூங்கையோர் ஆயினும்

உய்விப்பான் உள்ளுறை நாதன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s