May 2017 – Rali – Ekkalam

ராலி க. நி. தெக்காலம்  #447

கருத்தில் அடக்க

      வொண்ணாது என்றென்றும்

இருத்தலாகிய பேரின்பப்

      பொருளறியாத

வருத்தம் நீங்கி இப்பிறவிப்

      பயன்பெற ராலி

ஒருத்தரும் அறியா அரனை

      அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #448

ஈடற்று இணையற்று

      ஓர் உவமையற்று

நாடற்று நேரம் ஏதுமற்று

      ஓர் உருவமற்று

தேடரியதாய்த் திகழும்

      பொருளறிய நள்ளிருள்

ஆடல் உகந்தானை ராலி

      உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #449

பார்க்குமிடம் பாரா

      இடமெல்லாம் கண்

சேர்க்குமிடம் சேரா

      இடமெல்லாம் மனம்

ஈர்க்கும் பொருளறிய

      நம் அல்லலெல்லாம்

தீர்க்கும் அப்பனை ராலி

      தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #450

ஆக்கி அழித்து

      அருள்புரிந்து எங்கு

நோக்கியும் கண்படா

      துறைந்து துயர்

நீக்கி யருள்வோனை

      அறிய ஆடும்

தீக்கூத்தனை ராலி

      தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #451

நேரில்லாது தனித்து

      மகிழ் ஒருபொருள்

பாரிலும் விண்ணிலும்

      பலவித விதமாய்

வாரி அருள் வழங்கும்

      வகையறிய இன்சொல்

காரிகை பாகனை ராலி

      கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #452

மாணிக்கம் வைரம்

      நல்முத்து பொன்

காணினும் காணாது

      இங்கு என்னைப்

பேணிடும் அருளொன்றே

      எண்ணி ராலி

கோணிய பிறையனை

      எண்ணுவ தெக்காலம்?

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s