Mar 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #273:

சற்றேயுன் பாதம்வைத்

    தாயரக்கன் ஆணவ

குற்றங் கடிய

    மனமழுக் காங்குற்றம்

பெற்றேன் இறைபக்தி

    அற்றேன் இரங்குவாய்

சற்றேயுன் பாதமென்மேல்

   வைக்க.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #274:

தடுமாறும் உள்ளம்

    படைத்த மனிதர்

படுந்துயர் தீர்க்கவே

    ஈசா பரிவாய்

நடுநிசியில் கூத்தாடி

    நன்மை தரவே

உடுக்கடித்தும் தூங்கினேன்

    நான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #275:

உடுக்கொலி கேட்டும் உறங்கும் மனிதர்

படுந்துயரும் தீர்ப்பான் பரமன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #276:

சிற்றம் பலத்தான் புகழ்தவிர வேறேதோ

கற்றென்ன கண்டேன் உலகில்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #277:

வதஞ்செயும் சம்சாரம்

    விட்டு உயிர்போய்

பதஞ்செயும் தீக்குள்

    கிடக்கும் எனக்கு

இதஞ்செயும் நாட்டியம்

    ஆடினாய் ஆனால்

எதற்காய் அடித்தாய்

    உடுக்கு.

 

உடுக்கொலி கேளா மனிதர் அடையும்

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

உடுக்கொலி கேட்பின்

    அனைத்துத் துயரும்

விடும்நம்மை கேளா

    மனிதர் பிரமன்

இடுந்துயர் எல்லாம்

    படஅவர்க்கு நேரும்

இடுக்கண் களைவதாம்

    நட்பு.

 

 

உடுக்கொலி பற்றித் தெரியா துளற

படும்பேஜார் வேண்டும் எனக்கு.

 

இரவில் கனவினில்

    நானென்னைக் கண்டு

சிரமுதல் கால்வரை

    ஒத்தது போலே

பிரமமும் ஒக்கும்

    உலகு.

 

உப்பாலே ஆனபொம்மை பற்றி அறிந்தவர்

தப்பு பிரமமா ராய்தல்.

 

நட்டுவன் இன்றியாடும் ஈசனை எண்ணினால்

விட்டுவிடும் பாசபந்தம் அன்றோ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #278:

பஞ்சமொடு பட்டினியும்

    நீரற்ற ஆறுகளும்

நஞ்சான காற்றும்

    கொலையுடன் கொள்ளையும்

மிஞ்சிடும் நம்முலகை

    விட்டுவிட்டு தேவருக்காய்

நஞ்சமுது செய்தவன்

    வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #279:

மஞ்சசுகம் கண்டுவாழ்

    தேவருக்காய் ஓடிவந்து

நஞ்சுண்டாய் எம்முலகில்

    மூச்சுக்காற் றுந்நீரும்

நஞ்சான தொன்றும்

    அறியமாட்டாய் கெஞ்சினோம்

நஞ்சுண்ண சீக்கிரம்

    வா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #280:

எதையும் எரித்திடும்

    ஆலகாலம் வேடன்

உதையும் உமிழ்நீரும்

    பிட்டும் அடியும்

விதைத்திட்ட நெல்லும்

    எதையும் தரலாம்

அதையிதை எண்ணாது

    தன்னில் மகிழ்வான்

எதைத்தரினும் ஆனந்தம்

    தான்.

 

நிலவுலகில் நான்படும் பாட்டை நினைந்து

உலகழிக்கும் அன்பே சிவம்.

 

இகவாழ்வில் நம்மை வினைசுடக் கண்டு

ஜகமழிக்கும் அன்பே சிவம்.

 

கனவிலும் நிம்மதி இல்லாதார் வாழ

மனமழிக்கும் அன்பே  சிவம்.

 

இன்றுசெத்து வெந்தநான்

    வந்திடாது அண்டமெல்லாம்

நின்றழிக்கும் அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #281:

காலமானோர் பற்றி

    எரியும் இடுகாட்டில்

ஆலவாய் அண்ணலே

    ஆடியது போதும்நீ

ஓலவொலி கேட்டிலையோ

    காலன் அலறவே

பாலனைக் காக்கப்போய்ச்

    சேர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #282:

(அன்புள்ள பெரியோர்களே)

கயிலாய நாதனுக்காய்

    மார்க்கண் டனுக்கும்

உயிரெடுக்க விட்டிடா

    சாவித் திரிக்கும்

வயிறு பசித்த

    நசிகே தஸுக்கும்

துயிலறியா நானஞ்சும்

    சோகக் கதையைப்

பயின்றீரோ நான்பாவ

    மன்றோ?

–  இப்படிக்கு,

உங்கள் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும்

யமதர்மராஜன்

 

ராலியின் வேண்வெண் முயற்சி #283:

ஆதியந்தம் இல்லான்

    அயன்மா லறியாத

சோதியாய் நின்றான்

    மறையவர் பக்தியாய்

ஓதிடும் வேத

    ஒலியானான் பாவையோர்

பாதியன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #284:

வாட்டம் எதுவுமிலா

    தேவர் உலகத்தில்

ஆட்டமும் பாட்டமும்

    என்றும் சுகவாழ்வு

ஈட்டினார் சூழாங்கே

    ஆட்டம்நீ போடாது

போட்டுப் படுத்தும்

    நிலவுலகில் நள்ளிரவில்

சூட்டுடன் வேகும்

    பிணத்தருகில் பேயுடன்

ஆட்டமேன் ஐயா

    உனக்கு.

 

அறியாயோ அன்பும்

    சிவமுமொண்ணு இஃதை

அறியாதார் வாயிலே

    மண்ணு.

 

வெண்ணீறும் நாமமும்

    இட்டார் வளர்த்ததே

பண்ணும் தமிழும்

    இறைபக்தி இல்லாத

மண்ணில் தமிழும்

    வளராது வேறொரு

மண்ணும் வளராது

    திண்ணம்.

 

தண்ணீர் தரும்தமிழ்

    என்றாய் நம்மக்கள்

கண்ணீர் சொரிந்தும்

    பக்கத்து நாட்டவர்

தண்ணீர் தரவில்லை

    அன்றோ.

 

அரியும் சிவபிரானும்

    ஒன்று அரனின்

சரிபாதி அன்னையும்

    அப்பனும் ஒன்று

அரிதங்கை நாரா

    யணியும் திருமால்

அரியுமே ஒன்று

    இதைதினம் எண்ணும்

பெரியோர் அனைவருமே

    ஒன்று.

 

தவமறியார் கொல்லாமை

    ஒன்றே தமது

தவமென்பார் பல்வித

    புலாலுண்ணல் செய்வார்

சவம்மேல் சாதனை

    செய்வார் சிறிதும்

சிவமுமில்லா அன்புமில்லா

    பௌத்தர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #285:

சுரர்சுடும் நஞ்சது உண்டு பெருந்தீ

புரஞ்சுட வைத்து அறிவோர் மகிழ

இரவாம் பொழுதில் நடனம் பயிலும்

அரவார் சடையன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #286:

படைநடுங்கும் பாம்பொன்று

    மேலணிந்து முட்டும்

விடைமேல் அமர்ந்து

    திறல்மிகு வீரர்

துடைநடுங்கும் காட்டமர்ந்து

    உன்னருகில் செல்லத்

தடையென்ன என்கிறாய்

    நீ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #287:

வெந்ததாம் சாம்பல்

    தரிப்பான் கணபதி

கந்தன் தகப்பன்

    அனந்த மறையுறை

சந்தத் தலைவன்

    அரவொடு ஆறணியும்

அந்தணன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #287:

உடுக்கொலி சத்தம்

    ஒருபக்கம் நந்தி

இடுமவர் மத்தள

    சத்தம் சலங்கை

இடுங்கிங் கிணிசத்தம்

    போடயிங்கு சேய்நான்

இடும்குரல் கேட்பாயோ

    நீ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #289:

நடுக்கும் பனிசூழ் கிரிவாழ் கிரீசன்

மடுக்கள் நிறைக்கும் நதிவாழ் சடையன்

படுக்கும் பிணம்வாழ் சுடலைத் தலைவன்

கொடுக்கும் அருளே சதம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #290:

நெற்றியோர் கண்ணன்

    குதிநதி தன்முடிக்

கற்றையில் கொள்வன்

    குளிரொளி வெண்பிறை

முற்றா மதிசேர்

    தலையன் அவன்பதம்

பற்றி இருத்தல்

    தவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #291:

சுரபதி தாழ்ந்து

    வணங்கும் அரசன்

புரமது பற்றி

    எரிக்கும் தலைவன்

வரந்தரும் மாலயன்

    போற்றிடும் தேவன்

அரனே உணவிடுவேன்

    நீவீடு வீடாய்

இரந்து திரிதல்

    விடு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #292:

அழிக்கும் தொழிலன்

    விழிக்கும் நுதலன்

மொழிக்கு அடங்கா

    வழிக்குத் துணைவன்

சுழிக்கும் நதிவீழ்

    சடையன் தொழுவோம்

கழிப்பான் பழவினை

    இன்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #293:

வெள்ளநீர் தன்முடி

    கொள்ளுவான் தென்திசை

குள்ளமுனி தன்மணம்

    காணவே பண்ணுவான்

கள்ளமாய்ப் பொய்சொல்ல

    அன்று அயன்சிரம்

கிள்ளுவான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #294:

தரித்தவன் மானும்

    மழுவும் மறையை

 விரித்தவன் வாய்மூடி

    நால்வர் உணர

மரித்தவர் மேனியை

    நன்கெரித்த சாம்பல்

தரித்தவன் காமன்

    எரித்தவன் பாகம்

பிரித்தவன் வன்தோள்

    நெரித்தவன் வேழம்

உரித்தவன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #295:

துறந்து பறந்தான்

    இளையவன் அண்ணன்

திறந்த மரத்தடி

    சேர்ந்தான்நற் கங்கை

மறந்திட இல்லாள்

    உறுத்தவும் செய்தாள்

துறந்தாய் குடும்பம்

    இரந்தாய் உணவு

திறந்தேன் எனதில்லம்

    இன்றே உனக்காய்

மறவாய் எனக்கு

    கதிநீயே நானே

உறவும் கதியும்

    உனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #296:

பேணுதல் என்தொழில்

    என்று திருமால்

தூணுக்குள் வந்தும்

    பணிசெய்ய பெண்ணும்

ஆணும் படைக்கும்

    பணிபிரமன் செய்ய

நாணுதல் இன்றி

    பணியேதும் செய்யா

தாணுவாய் நின்றாயே

    நீ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #297:

எந்தப் பொழுதும்

    நடனமாடிக் கால்கடுத்து

எந்தவேளை போதுமென்று

    கண்மூடி ஓய்வெடுக்க

வந்துஆல் கீழ்நீ

    அமர்ந்தாயோ நான்குபேர்

வந்தனர் ஞானம்

    பெற.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #298:

ஓங்குவான் மாலயன்

    ஏங்கிநிற்க தேவகங்கை

தாங்குவான் தன்சடையில்

    தேங்கியோட கண்டத்தே

தாங்குவான் நீலமாய்

    ஆலகாலம் பால்மதியம்

தாங்குவான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #299:

பிணப்புகை தானோ

    மறைத்தது ஆடும்

பணப்படம் தானோ

    மறைத்தது நம்முள்

பிணக்கமோ உன்முன்பன்

    னாள்நின்றும் நீயோர்

கணமேனும் பாராத

    தேன்.

 

மன்றாடும் ஈசனைக் கண்டு வணங்குவோம்

இன்று சனிப்பிர தோஷம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #300:

கடலைக் கடைந்து

    கொடும்விட வெண்ணெய்

சுடவும் பயந்த

    வடதிசை தேவர்

இடரை நினைந்து

    விடத்தை விழுங்கி

உடனே தடுத்தாய்

    சரணம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #301:

சிங்கமேறும் பார்வதி

    கந்தன் கணேசனும்

எங்கும் பனிவீழ்

    மலைவாழ்ந்தார் வெம்மையே

தாங்கார் என்றுநீ

தங்கும் தனிமைக்காய்

வெங்காடு தங்கியதுண்

    மையே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #302:

விண்ணவர் போற்றிடும்

    மன்னவன் மண்ணளந்து

விண்ணளந்த மாலயன்

    காணாத கோனவன்

விண்ணகத்து மாபுரம்

    மூன்றும் எரியுண்ணப்

பண்ணியவ‌ன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #302:

ஏறுடையான் ஆயிரம்

    பேருடையான் பாயுமோர்

ஆறுடையான் யாங்கணும்

    ஊருடையான் வெண்சாம்பல்

நீறுடையான் பொங்கிடும்

    வீறுடையான் வெண்மதிக்

கீறுடையான் பாற்கடல்

    சாறுடையான் பெண்ணொரு

கூறுடையான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #303:

தொன்மையான் அன்பருக்கு

    மென்மையான் தீயவர்க்கு

வன்மையான் ஆதியந்தம்

    இன்மையான் ஈடில்லா

வின்மையான் பாகமொரு

    பெண்மையான் பார்த்திடப்

பன்மையான் எஞ்சிநிற்கும்

    உண்மையான் வையத்து

நன்மையான் தூயவர்க்கு

    அண்மையான் எண்ணவொண்ணா

தன்மையான் பாதம்

    துணை.

(வின்மை = வில் வன்மை)

 

@தமிழின்பன்பர்காள்:

ஆட்டமாடும் நாதன்

அருளால் அடியவன்

பாட்டனானேன் இன்று

    இனிதே.

 

ஏத்திடுவேன் ஈசனை

    அன்பாய் எனக்கொரு

பேத்தியைத் தந்தான்

    அவன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #304:

பாயும் புலித்தோலும்

    பாயுமோர் பேராறும்

தேயும் மதிவெண்

    பிறையும் அணிவோயென்

பாயும் மனமடக்க

    உன்திரு நாமமே

ஆயுதம் இங்கு

    நமக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #305:

அங்கிங் கெனாதபடி

    எங்குமே நீக்கமறத்

தங்கினான் தேவலோக

    கங்கை தலைமுடியில்

தங்கவே பண்ணினான்

    பார்வதி தன்னுடல்

பங்கினான் மார்க்கண்

    டனைக்காக்கக் கூற்றலறப்

பொங்கினான் பாதம்

    துணை.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s