Mar 2017 – GRS

உடுக்கையுடன் மான்மழு ஏந்தி

இடுப்பசைத்தாடும் நாதனே – கிடக்கை

ஆய்ந்து தெளிந்து அறம் செய்ய

பாய்ந்து அருள் செய்.

 

சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் கொள்ளாமல்

எல்லாப் பொறுப்புமியல்பாய் – மெல்ல

வெள்ளரிப் பழமாய் இனிதே விலக

அள்ளித் தருவாய் அருள்

 

பொய்யெது பொய்யலதெது

செய்வது அல்லதென- மெய்

நடன நாதனே சித்தம் தெளிய

உடனே உவந்தருள்.

 

பற்றை பரந்து விரிந்து பற்றி

பற்றிலிருப்பது போதும்- உற்ற

மெய் நாதனே இதமாய் கற்பிப்பாய்

கை விடும் கலை.

 

நள்ளிரவு நடன நாதனின் நாமம்

மெள்ள உணர்ந்துரைத்தால்- தெள்ளென

அள்ள அள்ள குறையாமல் மனதின்

உள்ளே ஊறும் கள்.

 

பாயும் புலனைந்தும் தோற்றுமிந்த

மாய நிலை தேற்றி – நேயமாய்

எக்காலும் நம்மையினிதே காக்கும்

சொக்கன் பாதம் சேர்.

 

மெய் வழி தவறி மறந்து

பொய் வழி கருமம்- செய்த

அக்காலும் நம்மையினிதே காக்கும்

சொக்கன் பாதம் சேர்.

 

பழ வினை பற்றி படுகுழியில்

விழு நிலை ஆயினும்- முழுதாய்

முக்காலும் நம்மையினிதே காக்கும்

சொக்கன் பாதம் சேர்.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s