Feb 2017 – Rali – Ekkalam

ராலி க. நி. தெக்காலம்  #440

வாழிநீயென மனமும்

    வாக்கும் உடல்

வீழும் வரை வாழ்த்தி

    முடிவுறா இப்

பாழும் பிறவிச்சுழல்

    மீளவே ராலி

ஊழித்தீ வளர்த்தானை

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #441

அழுக்கனைத்தும் அகல

    எண்ணுவோம் நாம்

எழுத்தெண்ணனைத்தும்

    எட்டா பொருளை

வழுத்தலொன்றே வழி

    என்றே ராலி வாழ்நாளில்

கழுக்குன்று வாழ்வானை

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #442

இடம் மற்றும் நேற்று

      நாளையெனும் காலம்

கடந்து காண்பதும்

      அல்லதுமாய் நம்முள்

குடத்துறை விளக்காய்

      ஒளிர்வதறிய ராலி

குடமூக்குறை விடமணியை

      கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #443

எண்ண வொண்ணா

      பொருள் ஒன்றிங்கு

மண்ணிலும் விண்ணிலும்

      என்றும் உறைவது

திண்ண மாதலால்

      அதையறிந்துணர ராலி

அண்ணாமலை அண்ணலை

      அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #444

ஆயகலை அறுபத்துநான்கும்

      அறிய வொண்ணா

மாயப்பொருளை ஈரேழு

      லகத்து இணையிலா

நாயகனை நம்பிக்கடைத்

      தேற சடையிடை ஆறு

பாயவைத்தானை ராலி

      பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #445

விளைத்தலும் காத்தலும்

      நீக்கலுமிலாது தன்னில்

திளைத்துத் தனியே

      துய்த்திருக்கும் ஒருபொருளை

வளைத்து அதன் இயல்பறிய

      ராலி முடியில் பாதி

முளைத்த பிறையானை

      பிடிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #446

ஆலமாமரத்துள் சிறு

      விதையாய் நாமறியும்

காலமெனும் தத்துவத்தின்

      விதியாய் நாமறியும்

ஞாலமும் மீதியுமாய்

      விளங்கும் பொருளறிய

நீலஞ்சேர் கண்டனை ராலி

      நினைப்ப தெக்காலம்?

 

 

திக்கறியாதே வாழும்

மக்குநான் உனையென்றும்

நெக்குருகித் தொழாதும்

பக்கத்தில் இருந்தே

அக்காலம் இக்காலம்

முக்காலம் பரிந்து

அக்கறையாய்க் காக்கும்

சொக்கா உன்கோயில்

பக்கம்போய் சேவித்தல்

எக்காலம்?

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s