Mar 2017 – Suresh

உன்னிரு மலரடி நினைத்தே னல்லேன்

உன்திருப் புகழ்பாட வல்லே னல்லேன்

உனதடி யார்பணி செய்தே னல்லேன்

உன்னுளே யானும் என்னுளே நீயுமாய்

உனதுற வொன்றே உயிரிலு முணர்விலும்

உறுத்திட லென்றும் உறுதி செய்தேனே.

 

நதியில் புனலின் நடுவில் சுழியாய்

விதியின் முடிவில் வினவும் வினைதான்

சதியும் குடியும் சதமோ மனமே

மதிபுனல் முடியணி சிவன்பதம் பணிவாம்.

 

உடுக்கை ஒலியை உணராத மாந்தர்க்கு

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

நடுங்கியே நின்புகல் நாடியவோர் பாலனுயிர்

பிடுங்கிடவேதான்விரைந்த நமன்பாசம் நீயறுத்தாய்

ஒடுங்கிட உயிர்தான் ஊனுடம் பென்செயும்?

படுக்கையில் தான்வீழ்ந்து பாழுமுயிர் பிரியுமுன்னே

உடுக்கை யதனொலிதான் கேளேனோ வன்செவியன்

இடுக்கண் களைந்திடவே இனியாரை அழைப்பேன்யான்?

திருக்கயிலைத் திருநாதன் திருப்பாதம் சரணடைந்தேன்.

 

சந்த முந்தன்

சொந்த மென்று

வந்து இங்கு

இந்த வேளை

நந்தி சிவன்

சொந்த மகன்

கந்த வேளை

நொந்த தென்ன?

சந்தமது தான் போக

இந்த வுயிர்

பந்த மெலாம்

தந்த குகன்

எந்தை புகழ்

சந்ததமும்

சாற்றிடுவாம்.

 

கந்தனையோ அன்றி

உந்தனையோ என்றும்

நிந்தனைதான் செய்ய

உவந்திடுமோ நெஞ்சம்?

செந்தமிழ்க் கவியென்றாலே

சந்தமாய்ப் பொழிவதங்கே

சந்திர சேகரன்றிவே

றெந்தவோர் கவியுமறியேன்.

உந்துதல் தானெனக்கு

தந்தவுன் கவியால்நானும்

சந்தமாய் எழுதவெண்ணி

நொந்துதான் போனேனந்தோ!

 

அண்ணணின் சட்டைநானும் அணிந்திட விழைவதுண்டு

சின்னவன் தானே நானும் அண்ணனுக் கிணையாவேனோ?

சொன்னவர் நீர்வசிட்டர் அன்னவர்க் குரைத்தேன்நன்றி.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s