Jan 2017 – BKR

அஞ்சதால் அறியக்காணும்

        ஆனந்த நடனநாதன்

நஞ்சினைத் தரித்தநாதன்

        ஞானியர் ஏத்தும்நாதன்

நஞ்சுகொள் நாகம்தன்னை

        அங்கத்தே அணிந்தவாறே

பிஞ்சிலே பழுத்தவன்கண்

        பிரணவம் செவியுணர்ந்து

 விஞ்சிடும் மகிழ்வினாலே

      விரிநடம் புரிவோன்நம்மை

அஞ்சிடேல் என்று கூறி

      அருகிலே நின்றிருக்க

கொஞ்சமும் கவலையேது

      குறைகளும் ஏதெமக்கு

நெஞ்சிலே நிறைவுகொண்டு

      நாளுமே வாழ்வோம்நாமே.

 

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மையுண் டாகப் பெறின்.  (திருக்குறள்)

 

ஆணின் அரும்பிறவி யாவுள பெண்மையைப்

பேணிப் பெருமை பெறின்.  (புதுக்குறள்)

 

மூலம் மறந்த அயன்தலையில் குட்டிய

வேலன் செயலும் விளையாட்டே -நீலகண்டன்

பத்தினியின் சோதரர்க்குப் புத்திர னாம்அயனின்

அத்தைமகன் தானே குகன்

 

 

Author: Rali Panchanatham

Great Guy

Leave a comment