Rali: Nov 12 – Nov 30, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #162:

கோவில் குளம்மட்டு

      மின்றிவேறு திட்டத்தில்

பாவிகள் சேர்த்த

      பழங்காசு வீணாய்ப்போய்ச்

சாவினும் மேல்துயர்

      பாவிகள் பெற்றிட

சேவித்துக் கேட்கிறோம்

      ஈசா!

 

ராலியின் வேண்வெண் முயற்சி #163:

ஒருஎண்ணம் பின்வரும்

      எண்ணம் இவற்றுள்

ஒருஎண்ணம் இல்லா

      இடைவெளியில் உள்ள

ஒருஉண்மை காண்பது

      நன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #170:

சுமக்க விறகில்லை

      நீஉன் தலையில்

சுமக்க இதுமண்ணும்

      இல்லை தினமும்

சுமக்க நதியுமில்லை

      என்மன பாரம்

சுமக்க உனக்கேனச்

      சம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #416

எப்போது எங்கும்

      நிறைந்து அப்பாலைக்கும்

அப்பாலாய் அருகிலும்

      அணுவுக்குள் அணுவிலும்

ஒப்பாரிலாது ஒளிரும்

      வானோர் விழைந்து

முப்போதும் ஏத்துவானை ராலி

      ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #417

 

அருமறையின் ஒலியிலும்

      அயரா அலையிலும்

இருமையிலா நிலையிலும்

      நோக்கும் உருவிலுமோர்

உருவிலாது ஈரேழுல

      கெங்கும் மேவும்நீறேறு

திருமேனியானை ராலி

      தொழுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #418

ஆசறு பொருளாய்

      என்றுமாரா அமுதாய்

வாசநறு மலர்

      மணமாய் வேண்டுவோர்

பாசமறுக்கும் ஈசனை

      புவியோர் கண்கூசும்

தேசனை ராலி தேடி

      வணங்குவ தெக்காலம்?

 

அலையலையாய் எழும்பிறவிக்

      கடல்கடக்க என்றும்

மலைமகள்கோன் சிவபெருமான்

      பதம்பணிய வேண்டும்.

 

வரவில்லை ஓசைநயம்

      என்கவியில் அருள்வாய்

உரகமதை சூடுசடை

      எம்பெருமான்.

 

தடுமாறித் திணறாது

      நான்கவி எழுதவேதான்

சுடுகாட்டில் இடம்போட்ட

      கோனவன் அருளவேண்டும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #175:

எங்கெங்கோ வேகமாய்ப்

      பாயுமென் உள்ளத்துள்

எங்கள் விநாயகா

      நீரமர்ந்து சென்று

மயிலை முறையாக

      வென்றிருந்தால் தம்பி

கயிலையில் தங்கியிருப்

      பான்.

 

ராலி க. நி. தெக்காலம்  #419

பழங்கதை பேசிப்

      பொன்னாய காலம்

விழலுக்கு நீர்வாரி

      இறைத்தாற் போல்

சுழன்றோடி ஒருநாள்

      மறையும்முன் ராலி

தழலுருவான தலைவனை

      தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #420

ஆடும் உயிர்களாய்

      ஆடா பொருட்களாய்

காடு நாடுவீடு

      விசும்பென நிறைவதாய்

ஈடில்லா இறையாய்

      உள்ள வெண்மதி

சூடு மைந்தனை ராலி

      சேவிப்ப தெக்காலம்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #178:

பெண்ணையே தானமாய்ப்

      பெற்றுத் தலையிலும்

பெண்ணை  உடம்பிலும்

      வைத்துப் பிரசவம்

பெண்ணுக்குப் பார்த்தநீ

      ஏன்காமன் வேண்டிநிற்கும்

பெண்ணெண்ணம் தூண்ட

      எரித்தாய்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #179:

மூத்தபிள்ளை கல்யாணம்

      வேண்டாமே என்றிருக்க

போத்தேறும் வேலன்

      இருதாரம் கொள்ளவுன்மேல்

ஓடுநதி கொண்டதால்

      இல்லாள் சினக்கநீ

காடுசென்ற காரணம்

      கேளேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #180:

நித்தியம் இல்லையிவ்

      வாழ்வு உயிரின்னும்

எத்தனை நாளிருக்கும்

     என்றறியோம் என்றவாறு

எத்தனை எண்ணியும்

      அன்றே மறந்திட

எத்தனை கோடி

      விஷயங்கள் நீவைத்தாய்

அத்தனே எங்களீசா

      ஈசா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #181:

நக்கீரன் மன்மதனை

      நெற்றிக்கண் சுட்டது

அக்காலம் பின்னுன்கண்

      மூடியே வைத்தது

தக்க எரிபொருள்

      தேடியோ காண்பாயென்

மிக்கபெரும் பாவப்

      பொதி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #182:

சுமந்து விறகுவிற்றாற்

      போல்மண் பிறர்போல்

சுமந்து உழைத்தாலேன்

      பட்டிருப்போம் நாங்கள்

உமக்காகப் பட்ட

      அடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #184:

ஓட்டமாய் ஓடுமென்

      வாழ்வில் களைத்துப்போய்

வாட்டம் மறையவுன்

      வீடுவந்து கண்டேன்நீ

ஆட்டம் தினமாடி

      சோர்ந்தது வந்தேன்நான்

வீட்டுக்கு நீபாவம்

      என்று.

 

ராலி க. நி. தெக்காலம்  #422

நல்லோர் உறவு

      பெற்று உள்ளத்தே

தொல்வேத நெறி

      கண்டு அகத்திருள்

இல்லாது செய்ய

      ராலி பகலோன்

பல்லுடைத் தானை

      பாடுவ தெக்காலம்?

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s