Oct 31, 2016

Rali:

@VKR & BKR – I am quite fascinated by your discussions on இவ்வுலகம் & அவ்வுலகம்.

In that context, here is my attempt, based on the famous ‘Pascal’s Wager’

ராலியின் வேண்வெண் முயற்சி #123:

அவ்வுல குண்டென்று

      நம்பி அதில்லாத

அவ்வுண்மை கண்டழுவார்

      பாவமே என்றாலும்

அவ்வுலகில் லையென்றே

      எண்ணி அதிருக்கும்

அவ்வுண்மை கண்டு

      அதிர்ந்து அழுபவர்

அவ்வுல கில்பரி

      தாபம்.

(Pascal’s Wager)

Rali:

@SKC:

சொந்தக் கவியாய்

      இருந்தும் எனக்குன்போல்

சந்தக் கவிபிறப்ப

       தில்லை இனியென்றும்

எந்தவொரு காரணம்

      சொல்லியும் நீயிங்கு

வந்தெழு தாதிரா

      தே.

 

Rali:

@சுரேஷ்:

அண்ட பகிரண்டம்

     ஆட்டும் பதங்களைக்

கொண்ட உனது

     கவிபடைப்பு இவ்விடம்

கண்டு வெகுநாளாய்

     விட்டது.

 

SKC:

சட்டியில் இருப்பின்

அகப்பையில் வருமென சான்றோர்

தட்டி யிங்கு

சொல்லி வைக்க

சட்டியில் விரதம் ஏற்று

சங்கரன் மகனை மனத்

தொட்டிலில் நிறுத்தி

தூய மனதோடும்

மட்டிலா மகிழ்வோடும்

மால்மருகன் அடி போற்ற

விட்டிடும் வீண் துயரும்

வேலவன் அருளாலே

எட்டுமே மெய்ஞ் ஞானம்

என் அகப் பையில் இங்கு.

 

SKC:

கந்தனை நினைக்க சிந்தனை பெருகும்

வந்தனை செய்யின் வாழ்வும் உயரும்

நிந்தனை செய்யின் அந்தமும் புரியும்

விந்தையாம் உலகில் பந்தமே அகற்ற

தந்தையின் குருவை தாள் பணிவோமே.

 

SKC:

கள்ளத் தனம் பயின்று

காதலில் தான் உழன்று

உள்ளத் தனைய

உலகின்பம் பல துய்த்து

வெள்ளத்தின் விசையில்

விரையும் சருகாய் வாழ்க்கைப்

பள்ளத்தில் வீழ்ந்து

பரிதவித்தே அலைந்து

மெள்ளத் திறனிழந்து

மீளாத் துயில் தன்னை

கொள்ளத் தகுமோ

குவலயந் தன்னில்

வள்ளிக் கணவனை

வணங்காது என் மனத்தே.

 

SKC:

வெண்பாவில் சதம் கண்ட

வியத்தகு ராலி !

வியந்தேன் உன் திறன் கண்டு

நீ ஒரு விராட் கோலி !

Rali:

@SKC:

மருந்துக்கும் சந்தமிலா

      கோடிசொல் பாட்டின்

விருந்துன் கவிதைநீ

      பாறை!

 (நீ பாறை = You Rock) 🙂

 

ராலியின் வேண்வெண் முயற்சி #124:

ஒருகணமும் காரியம்

      செய்யா திருப்போன்

ஒருவனும் பூமியில்

      இல்லை.

(பகவத்கீதை 3.5)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #125:

பிறர்குல வேலை

      புரியாதே பார்த்தா

அறமன்று அச்சம்

      தரும்.

(பகவத்கீதை 3.35)

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s