VKR:
குறுகிய காலத்தில் உங்கள் தமிழுக்கு விசிறியானேன். உமக்கும் குழுமத்தில் பிறர்கும்
“நீண்டவயதும் நிறைசெல்வமும் உமதீசன்
வேண்டுமட்டும ஈவான் விரைந்து’
BKR:
@VKR
நீண்ட வயதும் நிறைசெல்வ மும்ஈசன்
வேண்டுமட்டும் ஈவான் விரைந்து.
தூய குறள் வெண்பாவால் வாழ்த்தியமைக்கு நன்றி
ராலியின் வேண்வெண் முயற்சி #114:
எங்கும் நிறையான்மா
என்றும் ஒருகூட்டில்
தங்காது செல்வதேன்
சொல்வேன் கதிரவன்
எங்கும் மறைவதில்லை
தோன்றலும் இல்லை
அங்ஙனமே ஆன்மாவாம்
காண்.
(கடோபநிஷத்)
BKR:
கதிரவனுக் கில்லை பகலும் இரவும்
கதிமாறும் பூமிதரும் தோற்றம் – அதுபோல
ஆன்மா அசையா ததில்தோன்றிக் காண்பதெல்லாம்
ஊனுடம்பாம் மாயை உணர்.
ராலியின் வேண்வெண் முயற்சி #115:
அழியும் உடம்பு
தணலில் எரிந்தும்
அழியா திருப்பது
ஆன்மா.
(கடோபநிஷத்)
ராலியின் வேண்வெண் முயற்சி #116:
மறைக்கும் நெருப்பைப்
புகையும் சிசுவை
மறைக்கும் கருப்பையும்
கண்ணாடி காட்சி
மறைக்கும் அழுக்கு
அதுபோல ஞானம்
மறைக்கும் மனிதர்கண்
ஆசை.
(பகவத் கீதை)
ராலியின் வேண்வெண் முயற்சி #117:
எல்லாம் அறியும்
பரமாம் ஒருபொருளை
சொல்லால் அறிதல்
அரிது.
ராலியின் வேண்வெண் முயற்சி #118:
பணத்தாசை காமமுள்ளம்
விட்டகல அந்தக்
கணம்வரும் பேரானந்
தம்.
(பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்)