Oct 27, 2016

பித்தன் 86.

வாழவந்த உலகினிலே

வாழும்வழிகள்

பலவுண்டு

தானம்செய்து வாழுங்கள்

தியானம் செய்து

வாழுங்கள்

யோகம்செய்து வாழுங்கள்

போகம்நீக்கி வாழுங்கள்

தனத்தை மட்டும்

சேர்க்காமல்

குணத்தைக் கூட்டி

வாழுங்கள்

கணவன்மனைவி

உறவினிலே

விட்டுக்கொடுத்து

வாழுங்கள்

தந்தைமகன் உறவினிலே

நண்பனைப்போல்

வாழுங்கள்

நட்பும்சுற்றம் சூழலிலே

நேசமாக வாழுங்கள்

திரைகடல் சென்றாலும்

இறை நினைப்பில்

வாழுங்கள்

வாழ்ந்து பார்த்துச்

சொல்லுங்கள்

வாழ்க்கை இனிமை

ஆனதென்றே.

 

பித்தன் 87.

அன்னிய நகரில் செய்த

பாபம் புண்ணிய

நகரில் போய்விடும்

புண்ணிய நகரில் செய்த

பாபம் காசிமா நகரில்

கரைந்திடும்

காசியிலே செய்தபாபம்

குடந்தைமா நகரில்

நீங்கிடும்

குடந்தையில் செய்த

பாபம் திருக்குடந்தை

நகரிலேயே நசிந்திடும்.

 

பித்தன் 88.

பக்காத்திருடன் வருவான்

என்று பணததைப்பூட்டி

வைக்கின்றீர்

பக்கத்திலேயே ஐந்து

திருடன் உன்னுள்

இருந்து வாழ்கின்றன்.

கண்கள் என்ற திருடன்

காட்சிகளை கொள்ளை

அடிக்கிறான்

காதுகள் என்ற திருடன்

சென்ற செய்திகளை

திருடி வருகின்றான்

நாசியென்ற திருடன்

ஒருவன் நாற்றஙகளை

திருடி வருகின்றான்

வாயென்ற திருடன்

ஒருவன் இரட்டைத்

திருட்டை புரிகின்றான்

உற்ற உணவையும்

பேச்சையும் நீக்கி

மற்றவற்றை புரிகின்றான்

மனம் என்ற மாதலைவன்

கூட்டமிதை வழிநடத்திச்

செல்கின்றான்

நல்லதோர் குருவை நாடி

நாடிச் சரண்

அடைந்திட்டால்

கொள்ளையர் கூட்டமதை

நசுக்கி நம்மை

வெள்ளை மனதாய்

வாழவைப்பார்.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s