Oct 23, 2016

பித்தன் 80.

ஆலிலைக் கண்ணனாகி

அரவணையில் பள்ளி

கொண்டு

நாபியில் பிரமனை உந்தி

படைப்பினில் புல்லாகிப்

பூண்டாகி புழுவாகிப்

பரவையாகி மிருகமாகி

பிறவிகள் பலகடந்து

மானிடப்பிறவியடைந்து

முற்பிறவியின் பயனால்

இருபிறப்பாளனாகி

நற்குடியில் பிறந்து

நல்லவர்களுடன்

இணைந்து நல்வாழ்வு

வாழ்ந்துவரும் நாம்

இறைவனுக்கு இக்கலியில்

செய்யும் நன்றி அவனை

இடையறாது நினைத்து

பாருங்கள் அவன் நாமம்

சொல்லி வாழ்ந்து அவன்

அருளை அடைந்திடுவோம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #94:

தெய்வம் அறியமுய

    லாவிடின் இங்குநாம்

எய்திய இப்பிறவி

    வீண்.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #95:

சதைகுருதி என்பில்லை

    நம்முடலி றையாம்

புதையல் அடங்கிய

    பெட்டி.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #96:

இரும்பும் அதையிழுக்கும்

    காந்தமுமாம் நம்மை

விரும்பும் இறைவனும்

    நாமும்.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

BKR:

உவமானம், உவமேயம் order மாறி வந்துள்ளள.

பின்வருமாறு சற்று மாற்றி எழுதினால்

சரியாயிருக்குமா என்று பார்க்கவும்.

 

இரும்பும் அதையிழுக்கும்

    காந்தமுமாம் நாமும்

விரும்பிநமை ஈர்க்குமிறை

                                         யும்.

 

பித்தன் 81.

வெண்ணைதனைத்

திருடித்தின்ற

நந்தகோபனே என்

உள்ளமதைக்

கொள்ளை கொள்ள

எண்ணமில்லையா

மண்ணையள்ளி

வாயிலுண்ட மாயக்

கண்ணனே என்

எண்ணமதைத்

தந்திடுவேன்

ஏற்றிடுவாயா

உரலிலே கட்டுண்ட

உலகளந்தோனே என்

மனதைக்கொஞ்சம்

கட்டிவைக்க மனம்

இறங்காயா

பார்த்தனுக்குப் பாடம்

சொன்ன பரந்தாமனே

என் அறியாமை

போக்கிட நீ அருள்

புரிவாயா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #97:

பஞ்சேயெல் லாத்தலைய

    ணைக்குள்ளும் ஈசனே

நெஞ்சிலெல் லோர்க்குள்ளும்

    காண்.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

பித்தன்:

பஞ்செல்லாம் தலையணக்

   குள்ளும்போ லீசனை

நெஞ்சிலெல்லோர்க்

   குள்ளும் காண்.

 

BKR:

அலகிடுவேன்  ஆழியதன்

                ஆழம் எனவோர்

இலவணப் பொம்மையமிழ்ந்

           தாற்போல் –  உலகில்

பிரமத்தைக் கண்டு

     சொலப்புகுவார் முற்றும்

கரைந்திடுவார் சொல்லவல்லார்

                                       யார்?

(இராமகிருஷ்ணர் உபதேச மொழி)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #99:

உப்புப்பொம் மைகடலுக்

    குள்சென்று ஆழமதைச்

செப்பத் திரும்புமோ

    ஆதிபிரம் மப்பொருளை

துப்பறி வாரதி

    லேகரை வாரதைச்

செப்பத் திரும்புவ

    ரோ?

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s