Oct 10, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #64:

கிடைத்ததை உண்டு

    செரித்திடுவான் ஏழை

படைத்ததை செல்வன்

    செரியான்.

(விதுர நீதி)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #65:

துண்டுதுண்டாய் என்னுடலை

    வெட்டிப்பார்த் துக்கண்டு

கொண்டேன்நான் வேறு

    பொருள்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #66:

நிறுத்துவோம்பெய் விப்போம்

    மழைதனை போதும்

வெறும்மா னிடமுயற்சி

    எனில்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #67:

சட்டம் மதியார்

    எவரும் மதியார்க்கு

சட்டதண்ட னையில்லை

    யேல்.

(மனு நீதி)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #68:

எந்தச்செ யல்பக்தி

    யற்றவன் செய்யினும்

அந்தச்செ யல்முற்றும்

    வீண்.

(பக்திஹீநேன யத்கிஞ்சித் க்ருதம் ஸர்வம் நிரர்த்தகம்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #69:

அறுபதுக்கு மேலானா

    லும்கற்றல் நன்றே

மறுபிறப்பில் வந்துத

    வும்.

(மனு நீதி)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #70:

மூடனுக்கு தானம்

    தருவதும் ஆற்றைக்கல்

ஓடத்தில் தாண்டலும்

    ஒன்று.

(மனு நீதி)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #71:

எறும்புகள் புற்றுகட்

    டல்போலே நாமும்

சிறுகச் சிறுக

    மறுமைக்குப் புண்யம்

உறுதியுடன் சேர்த்திட

    வேண்டும்.

(மனு நீதி)

 

BKR:

பெய்யெனப் பெய்துமழை

     நில்லெனநிற் காதோநம்

செய்கைதான் எல்லாம்

                                    எனில்.

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s