தீபாவளி 2016

பித்தன் 89.

பூவராகராய் அவதரித்து

பூமித்தாயைக்காத்து

நரகன் எனும் அசுரனை

தோற்றுவித்து அவன்

கொடுஞ்செயல்கள்

தாளாமல் அவனை

நல்வதம் செய்து

நானாவித வரங்களை

அவனுக்கருளி தீபாவளி

என்னும் நல்லதோர்

பண்டிகையை நமக்கு

அளித்த நரகனுக்கும்

நாரணனுக்கும் நன்றிகள்

நவின்றிடுவோம் கோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #109:

ஏற்றுவோம் தீபங்கள்

    காரிருள் போகவே

மாற்றுவோம் மேதினியில்

    சாந்தம் பெருகவே

சாற்றுவோம் வேதநெறி

    உன்மூச்சு ஆகவே

போற்றுவோம் உள்ளம்

    உருக.

(தீபாவளி வாழ்த்து)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #110:

நரகனாம் தன்மகவைத்

    தன்கணவன் கொன்ற

இரவை உலகெலாம்

    கொண்டாட வைத்து

நரர்நம் செயல்யாவும்

    அன்பாய்ப் பொறுக்கும்

தரணியாம் பூமித்தாய்

    வாழி.

(தீபாவளி பூமாதேவி வாழ்த்து)

 

பித்தன் 90.

கைலாஸவாஸா

காசிநாதனே

கங்கையைத்தலையில்

அணிந்தவேன

தைலஸ்னானம்

செய்திடேவ

தயாராய் நாங்கள்

இருக்கின்றோம்

தலையிலுள்ள

கங்கையை

தயைபுரிந்து அனுப்பி

வைத்தால்

தலைதீபாவளி

தம்பதிகள்

நிலையாக என்றும்

வாழ்ந்திடுவர்

(தீபாவளி நல்வாழ்த்துக்கள் ).

 

VKR:

தொலைந்தது காரிருள் சுடரொளியால்

மறைந்தது சூழ்கலி எண்திசையும்

நிறைந்தது பேரொளி-மற்றுமொருமுறை

முகிழ்ந்தது வையகம் இன்று.

 

BKR:

தாபங்கள் நீங்கியே தன்னிறைவு

               கொண்டநெஞ்சில்

தீபஒளி தானே தினம்?

 

BKR:

மனத்துக்கண் மாசின்றி

      வாழ்பவர்க் கெல்லாம்

தினம்தோறும் தீபா வளி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #111:

பட்டாசு புத்தாடை

    எண்ணெய்க் குளியலுடன்

கட்டாயம் ஈசனை

    எண்ணு.

BKR:

காசோடு காற்றையும் சேர்த்துக் கரியாக்கி

மாசு படுத்திடும் என்பதனை – யோசித்தால்

பட்டாசு இல்லாத தீபா வளிகூட

மட்டிலா இன்பம் தரும்

 

ராலியின் வேண்வெண் முயற்சி #112:

தன்மகன் வீழ்ந்தும்

    மனதில் உறுதியாய்த்

தன்னை மிதிப்போர்

    மகிழ்ந்திடச் செய்பூமி

அன்னை மறக்கலாமா

      உன்னை?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #113:

பட்டாசு மத்தாப்பு

    இ்ல்லாத பண்டிகை

சுட்டிக் குழந்தை

    ரசிக்குமா பாலர்கள்

மட்டும் மகிழாத

    நாளைத்தான் பூமித்தாய்

கேட்டாளோ என்ன

    இது?

 

Rali:

பாட்டுக்கொரு பீகேயார்

தமிழ்விரும்பும் சந்த்ரமௌலி

அன்னையேநினை கோபிநாத்

புதுத்தமிழ்வாழ் கல்யாணராமன்

தண்டீச்வரர்க்கடியான் முத்துமணி

கணையாழி புகழ்த்திரு பத்மநாபன்

பித்தனெனும் திரு ராமமூர்த்தி

சந்தக்கவி சந்திரசேகரன்

தமிழ் ரசிகை திருமதி ஜெயா

புத்தகவள்ளல் சபாபதி

அருணகிரிநடை சுரேஷ்

தமிழ் விரும்பி வீரராகவன்

உங்கள் எல்லோருக்கும் இந்த தீபாவளித் திருநாளில் எனது நன்றி.

ஆலவாய் அண்ணல் அருளட்டும் அனைவருக்கும்.

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s