பெருமிழலைக் குறும்ப நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #79:

தூயபக்தி சுந்தரர்

    மேல்குறும்ப நாயனார்க்கு

நாயகனை  மீண்டும்

    அடையவே சுந்தர

நாயனார் நாளை

    கயிலா யமலைக்குப்

பாயவெள் ளானையி

    லேறுதல் முன்குறும்ப

நாயனார் நாடிநின்று

    உன்பதம் சேர்ந்திட்ட

தூயசரி தம்கேட்டும்

    என்மனத் தேபக்தி

தோயவில்லை என்செய்வேன்

    நான்?

ராலியின் வேண்வெண் முயற்சி #86:

சுந்தரர் மேல்பக்தி

    கொள்குறும்ப நாயனார்

வந்தனை செய்தே

    அவரைத் தொழுது

வந்தத னால்சித்தும்

    பெற்றுக் கயிலாயம்

சுந்தரர் வெள்ளானை

    யில்சென்ற நாளுக்கு

முந்தின நாளே

    உயிர்விட்டுப் பாசமும்

பந்தமும் நீக்குமுன்

    னையடைந் தாரென்பர்

அந்தபக்தி போலெனக்கும்

    தா.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s