திருநாவுக்கரசர் (அப்பர்)

ராலியின் வேண்வெண் முயற்சி #77:

தோள்கொண்டு அப்பர்

    உழவார சேவையை

நாள்தோறும் செய்ய

    அவர்வேண்ட கோயிலின்

தாள்நீக்கி நீயருள்தந்

    தாயென் மனத்துக்குள்

தாள்நீக்கி உள்ளே

    அமர்.

ராலியின் வேண்வெண் முயற்சி #84:

சுண்ணாம்பில் தள்ளியும்

    தன்மனம் என்றைக்கும்

கண்ணுத லான்மீதே

    யென்று றுதியுடன்

விண்ணும் புவியுமுள்ள

    காலம் வரைமக்கள்

எண்ணத்தில் சைவமதம்

    வாழச்செய் வாகீச

அண்ணலே உம்பக்தியில்

    சொட்டேனும் நான்பெறப்

பண்ணவேண்டும் காரியம்

    என்ன?

ராலியின் வேண்வெண் முயற்சி #24:

ஓடிவுழ வாரப்

    பணிசெய் துனடியே

பாடித் தொழுதவா

    கீசரைய வர்மிகத்தள்

ளாடிய மூத்த

    வயதினில் சோதிக்க

ஆடிய பெண்களைக்

    காட்டிப்பார்த் தேபின்னர்

ஈடிலா வீடுதந்

    திட்டாய் எனக்கொரு

கோடிப் பிறவிகள்

    உண்டு.

ராலியின் வேண்வெண் முயற்சி #146:

உண்ணும்முன் அப்பூதி

      பையனைக் கொன்றும்மை

சுண்ணாம்பில் தள்ளினான்

      அப்பரே உம்வயிறு

புண்ணாக சூலைநோய்

      தந்தான் அவனைப்போய்

பண்ணால்நீர் வாழ்த்திய

      தேன்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s