திருநாளைப் போவார் நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #74:

நாளைபோ வோம்நாளை

    போவோ மெனதிரு

நாளைப்போ வாருருகி

    னாற்போலே நானுருகும்

நாளைக்காண் பேனா

    பரமா?

ராலியின் வேண்வெண் முயற்சி #73:

நந்தனார் பற்றிப்

    பெரிய புராணத்தில்

எந்தக் குறிப்புமில்

    லையாம் அவரொரு

அந்தணப் பண்ணையா

    ருக்கு மனம்மிக

நொந்துபோய் வேலை

    புரிந்ததாய் அக்கதை

இந்தகா லத்திலே

    மாற்றப்பட் டுள்ளதாம்

நந்தனார் பக்தியுணர்

    வோம்.

ராலியின் வேண்வெண் முயற்சி #75:

நற்றவம் செய்ததில்லை

    மூவா யிரமெனும்

கற்றாரை விட்டே

    வரவேற்கச் செய்ததோடு

சற்றே விலகென

    நந்தியைத் தள்ளினாய்

மற்றும் திருநாளைப்

    போவாராம் நந்தனார்

பெற்ற பெருமை

    உலகுணரச் செய்திட்ட

சிற்றம் பலத்தே

    நடமாடும் கூத்தனே

சற்றே எனக்கும்

    அருள்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s