Sep 24, 2016

பித்தன் 51.

ஒன்றே சிவனென்று

நன்றே நீ

வாழ்ந்திட்டால்

இருமைகள் வாழ்விலே

உனை என்ன

செய்திடும்

மும்மலங்கள் நீங்கி நீ

முத்தாக

வாழ்ந்திடலாம்

நான்கு

புருடார்த்தங்கள்

நன்றே நீ

அடைந்திடுவாய்

ஐந்து இந்திரியங்களை

உள்ளே நீ

இழுத்துவிட்டால்

அறுவகை காம

க்ரோதங்கள்

பஞ்சாகப்

பறந்துவிடும்

எழுந்து நீ அதிகாலை

இறைநாமம்

ஜபித்திட்டால்

எட்டு ஸித்திகளும்

கிட்டி நீ

வாழ்ந்திடலாம்

ஒன்பது கோள்களும்

உன் நண்பனாக

செயல்படுவர்

பத்துமுறை அவதரித்த

பரமன் உனக்காக

பதினோறாம் முறை

அவதரிப்பார்

சத்தியமான வார்த்தை

சலிப்பின்றி

வாழ்ந்திடுவோம்

 

பித்தன் 52.

தனம் தனம் தனம் என்று

தனத்தை நாடிச் செல்லாதீர்

மனம் மனம் மனம் என்று

மனத்தை நாடிச் சென்றிடுவீர்

மனத்தை நீங்கள் தனத்தின் பக்கம்

செல்லாதிருக்க

விரும்பினால்

குணம் குணம் நல்ல

குணம் உங்களை வந்தடையும்

சினம் சினம் சினம் என்ற

சினத்தை நாடிச் செல்லாதீர்

மனத்தை நீங்கள்

சினத்தின் பக்கம்

செல்லாதிருக்க

விரும்பினால்

குணம் குணம் குணம்

நல்ல குணம்

உங்களை

வந்தடையும்.

தினம் தினம் தினம்

நீங்கள் தேடி உள்ளே

தரிசித்திட்டால்

மனத்தை நீக்கி மோட்சம்

என்ற வீடுபேறு

அடைந்திடலாம்.

 

பித்தன் 53.

பாட்டி எங்கள் கையினிலே

பழயமுது

அளித்தபோது

பரவசமாய் இருந்த சுகம்

நெஞ்சினிலே

இனிக்குதே

தட்டினிலே இன்று நாம்

கையேந்தி

உண்ணுமபோது

பரவசமும் போச்சுதே

பழயசுகமும் போச்சுதே

தொட்டிலிலே

அன்னையிடம்

தாலாட்டு கேட்டபோது

தந்தசுகம் இன்றுவரை

நெஞ்சினிலே இனிக்குதே

கட்டிலிலே இன்றுதான்

தூக்கமின்றி

தவிக்கும்போது

தாலாட்டும் போச்சுதே

தாயின் சுகமும் போச்சுதே

அன்றுதான் தந்தையுடன்

ஆற்றுக்குச் சென்றபோது

குதித்துநான் குளித்தசுகம்

நெஞ்சினிலே இனிக்குதே

இன்றுதான் அறையினுள்

குறுகிப் குளிக்கும்போது

குளித்தசுகம் போச்சுதே

குதித்தசுகம் போச்சுதே

பத்து ரூபாய் எடுத்துச்

சென்று பலசரக்கு

வாங்கினால்

எட்டுரூபாய மீதமாக

வீடுவந்து சேருவேன்

இன்று நான் ஆயிரங்கள்

எடுத்துச்சென்று அதையே

வாங்கினால் அரைவயிறு

நிறம்பதே அவதியாயும்

ஆகுது.

பழையநாட்கள் மீண்டும்

பசுமையாக வந்திடுமா

பரமனே பதிலளிக்க

வேண்டுகிறேன்.

 

BKR:

ராமமூர்த்தி ஸார்

உங்கள் பதிவு 53 கண்டதும் எனக்குள் தோன்றிய எண்ணங்கள் கீழே:

 

காட்டில் திரிந்தஇனம் காலத்தி்ன் போக்கினிலே

நாட்டினை நாடியதும் நல்லதொரு மாற்றமன்றோ?

பாட்டியின் பழமமுதோ பல்சுவைக் கறியமுதோ

வாட்டும்பசி தீர்ப்பதிலே வேறுபட்டு நின்றதுவோ?

ஈட்டும் பொருள்மாதம் நூறென் றிருந்ததுபோய்

நோட்டுகளாய் ஆறிலக்க ஊதியமும் வந்தபின்னே

வீட்டுப் பொருள்விலையும் வீங்குதென வியப்பதுவோ?

ஏட்டில் உரைத்தபடி மாற்றமொன்றே உண்மையெனில்

கேட்டிடவோர் கேள்வியுண்டோ கேள்விக்கோர் விடையுமுண்டோ?

காட்டும் கருணையிலே கஞ்சமிலான் உள்ளிருந்து

ஊட்டும் அனுபவத்தை உள்வாங்கி ஊக்கமுடன்

ஆட்ட நாயகனோ டமர்ந்திந்த நாடகத்தை

நாட்டமுட னேரசித்து  வாழ்ந்திடுதல் நலமன்றோ?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s