பித்தன் 44.
ஓடியாடி உழைத்து ஓடாக
தேய்ந்து விட்டாய்
ஆடிஆடி பரத்தும் ஆட்டம்
இன்னும் ஓயவில்லை
பாடிபாடி பார்த்தும் ராகம்
ஒன்றும் புரியவில்லை
தேடிதேடி அலைந்தும்
நாடிய பொருள் கிட்டவில்லை
கூடிகூடி பேசி குறை
ஒன்றே மிச்சமங்கே
நாடிசிவன் தாளடைந்தால்
நற்கதி அடைந்திடலாம்.
பித்தன் 45.
பிறந்து நாம் வந்தபோது
இரண்டு பாரம் சுமந்து வந்தோம்
பாரசுமை கழியும்போது
பாபசுமை கூட்டி நின்றோம்
புண்ணியங்கள் கழியும்
போது சுமையேதும் கூட்டவில்லை
திரும்பநாம் போகும்போது
சுமை நமக்கு தேவைதானா
பாரத்தைநாம் பரந்தாமன்
பாதங்களில் அளித்து விட்டால்
பரந்துநாம் காற்றாக
கலந்திடலாம் பரமனில்.
பித்தன் 46.
பால் வற்றிய பசுவைநாம்
பாங்காக பராமரித்தால்
ஆளில்லா பிரேதம்தனை
நல்லடக்கம் செய்துவிட்டால்
நால்வகை வேதமுறைத்த
அச்வமேதயாகபலன்
சொல்லாமல் உனை வந்து
துல்லியமாய் சேர்ந்துவிடும்.
பித்தன் 47.
வேதியர்கள் நூறாண்டு
வாழ எனை வாழ்த்தினார்கள்
பாதிகாலம் தூக்கத்திலே
பாங்காக கழிந்தது
குழந்தையாக குமரனாக
குடும்பத்தில் தலைவனாக
அலுவலகப் பணியாக
ஆண்டுபல கழிந்தது
மீதிநாளில் உனை எண்ண
எண்ணமெனக்கு எழுந்தபோது
நானென்ன செய்வேன்
நாடிதளர்ந்து போச்சுதய்யா
சித்தமெல்லாம் உந்தன்
பாதத்தில் மொத்தமாக
அளித்து விட்டேன்
சத்தியமாய் காத்திடுவாய்
சச்சிதானந்த ரூபனே.
பித்தன் 48.
பாலூட்டி நிலவைக்காட்டி
சோறூட்டி தாலாட்டி
எனை வளர்த்த
அன்னைக்கும்
காலூன்றி நான் நடக்கும்
நாளில் என் கரம்
பிடித்து சிறந்த
பாதையில் எனை
நண்பனாக
வளர்த்த என்
தந்தைக்கும்
நாலுவகை கல்வியையும்
சிறப்பாக அளித்த
ஆசானுக்கும்
நானளிக்கும் வந்தனமே
இறைவணக்கமாகும்.
பித்தன் 49.
மண்ணுக்குள் விதையை வைத்து
விதைக்குள் மா மரத்தை வைத்து
மரத்துக்குள் மலரை வைத்து
மலருக்குள் மொட்டை வைத்து
மொட்டுக்குள் காயை வைத்து
காய்க்குள் கனியை வைத்து
கனிக்குள் ருசியை வைத்து
ருசிக்குள் நவரஸத்தை வைத்த
நந்தகோபனே.
என் தாயினுள் என்னை வைத்து
என்னுள்ளே மனதை வைத்து
மனதிற்குள் ஆசை வைத்து
ஆசையுடன் பாசம் வைத்து
பாசத்திலே பந்தம் வைத்து
பந்தத்தில் பேதம் வைத்த
வேத ராமனே.
உனக்குள்ளே உலகை வைத்து
உலகினிலே வெளியை வைத்து
வெளியினிலே காற்றை வைத்து
காற்றினிலே கனலை வைத்து
கனலுக்குள் நீரை வைத்து
நீருக்குள் நிலத்தை வைத்து
நிலத்தினிலே மரத்தை வைத்து
மரத்தினிலே விதையை வைத்து
விதையினுள் உயிரை வைத்து
உயிருக்கோர் உருவம் கொடுத்து
ஓடவிட்ட பரந்தாமனே.
சிலவேளை நீ என்னை
சாட்டைகொண்டு
அடிக்கும்போது என்னை
நீ அடித்த அழகை
ரசிப்பதா அன்று
வலிமிகுந்து அழுவதா
பதிலளிக்கவேண்டுகிறேன் பார்த்தஸாரதியே.
பித்தன் 50.
ஆலிலையில் கண்ணா
குழந்தையாக நீ
இருந்தபோதிலே
உலகம் யாவும்
அமைதியாக உன்
உள்ளே இருந்தது.
வெளிவந்த உலகமின்று
வெறியாட்டம் போடுது
கலியுடனே சேர்ந்து
சதிராட்டம் ஆடுது.
உனை மறந்து மக்கள்
தனைமறந்து
வாழ்கையிலே
உனை நினைக்கும்
எங்களுக்கு நீ
நிம்மதியைதருவாயா
வெண்குதிரை மீதேறி
கல்கியாக நீ வரும்
வரை காத்திருப்பேன்
உனக்காக கார்மேக
வண்ணனே.
Rali:
@பித்தன்:
லட்டுபோ லாம்நற்
கவிதை புனைபவரை
குட்டுவதா தப்பன்றோ
மாறா யுமதுகையால்
குட்டுவாங்கின் நன்றே
எனக்கும் கவியாற்றல்
எட்டுமென் றேகூறு
வேன்.
Rali:
ராலி க. நி. தெக்காலம் #398
நம்மால் முடியுமோ
நினைத்தால் நடக்குமோ
எம்மாதிரி முனைய
வேண்டுமோ முப்போதும்
சும்மாயிருக்கும் சுகம்
பெறஎன ஆயிரம் பேர்
அம்மானை ராலி
அண்டுவ தெக்காலம்?