Oct 04, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #41:

தினமும் முயன்றுனைப்

    பாடுதல் செய்யேன்

கனவில் உனதடி

    எண்ணுதல் செய்யேன்

மனமுள் குவித்து

    அணுபோல் எனக்குள்

அனவரதம் வாழ்சோதி

    காணுதல் செய்யேன்

உனக்கு ஒருசிறு

    சேவையும் செய்யேன்

எனக்கு அறிவுக்கண்

    என்றுதிறக் கச்செய்வாய்

சன்காதி யர்தொழும்

     தேவா,

 

SKC:

ஆதியும் இல்லை

அந்தமும் இல்லை

சோதியும் இல்லை

சுந்தரன் இல்லை

வேதமும் இல்லை

வேறெதும் இல்லை

வீதியில் பிட்டுக்கு

வீணே மண் சுமந்து

நாதியும் இல்லையென

நல்மன்னன் அடிக்க

போதுமித் தொல்லையென

புரிந்தே அங்கு

பாதி உடலையும்

பகுத்தே உமை பெண்

சாதிக்குத் தந்த

சங்கரன் நீயே

வேதியர் தலைவனென்று

வேண்டி நான் பணிந்தேன்.

 

பித்தன் 63.

வானவில்லின்

வண்ணம் கண்டேன்

வண்ணமயிலின்

தோகை கண்டேன்

மின்னலடிக்கும்

வெண்மை கண்டேன்

பினலிட்ட நதியைக்

கண்டேன்

வெண்ணிலவின்

அழகைக் கண்டேன்

மண்ணுக்குள் வைரம்

கண்டேன்

மேகங்களின் நடையைக்

கண்டேன்

நாகங்களின் படத்தைக்

கண்டேன்

விண்மீன்கள் மின்னக்

கண்டேன்

தண்ணீரில் முகத்தைக்

கண்டேன்

கண்ணா உன் படைப்பைக்

காண

கண்கள் கோடி

போதாதய்யா

மன்னா உன் அழகைக்

காண

என்னதவம் செய்வேனப்பா

 

பித்தன் 64.

அன்று நான் தலைசுற்றல்

என்றேன்

நாடிபார்த்து வைத்தியர்

சொன்னார் நாலுநாள் பத்தியமென்று

பொடி செய்து பொட்டலம்

அளித்து தேனில் குழைத்து சாப்பிட்ட வயிராற உண்ணச்சொன்னார்.

நாணயம் சில பெற்று

நம்பிஎன்னை விட்டுச்

சென்றார். ஐந்தாம்நாள்

காலையில் நான் எம்பிக்

குதித்து எழுந்திட்டேன்.

இன்றுதான் தலைசுற்றல்

என்றுசொன்னேன்

சுற்றங்கள் எனைத்தூக்கி

அலறும் ஓர் வாகனத்திலேற்றி பல

அடுக்குமனையில்

மூன்றெழுத்து அறையில்

உணவின்றி மூன்றுபேர்மூன்றுநாள்

வைத்திருந்து நான்காம்

நாள் ஐந்திலக்கத்தொகையை

கப்பம்கட்டிவிட்டு ஆறுவித

மாத்திரைகளுடன் வீடுவந்து சேர்ந்தேன்.

தலைசுற்றல் ஒன்றுதான்

காலச்சுற்றின் மாற்றமிது.

 

VKR:

மகன் தந்தைக் காற்றும் உதவி:

 

பல்லாயிரம் மைல் கடந்து பார்க்க வந்தேன் பேரனை

புகைப்படங்கள் பலபிடித்தான் பொன்னான என் மகன்

என் தாத்தன் படமின்றி என் நினைவில் அழிந்ததுபோல் – இத்தனைக்கும்

அப்போதெல்லாம் கறுப்பும் வெள்ளையும் தான்

நான் எளிதில் அழியமாட்டேன் என்பதில் ஆசுவாசம்

படத்திற்கு அப்பாலே நகமும் சதையுமாக

யார் நானென்று கதைசொல்லி

தந்தைக்காற்றும் உதவி செய்வானோ என் மகன்?

 

SKC:

இல்லானை இல்லாளும்

எந்நாளும் வேண்டாள் என

எல்லாம் உள்ளானை உலகு

உவந்தேத்தும் இங்கு

கல்லாமல் போனாலும்

கண் மூடும் முன்னே பொருள்

தள்ளாமல் கொள்வீர் இத்

தரணியிலே என்றே

சொல்லாமல் சொல்லி எமை

சூழ்ந்த இம்மாந்தரிடை

இல்லாத உன் அருளை

இறைவா! நீ தந்தருள்வாய்!

 

BKR:

இல்லாரை வையத்தார் தூற்றிடினும் யாருக்கும்

இல்லாது போமோ இறையருள்தான் – சொல்லி

இரவாமுன் இன்னருளால் காக்கும் இறையை

இரப்பதவன் பேருக் கிழுக்கு.

 

Rali:

@SKC

இல்லானை இல்லானென்

    றேசும் பலகோடி

பல்லா யிரமுள்ளா

    னையுமேசும் வையகம்

பொல்லாத தென்றே

    உணர்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s