சுந்தரர்

ராலியின் வேண்வெண் முயற்சி #23:

அங்கொரு நல்மனை

    யாளிருக்க இன்னொரு

மங்கை மணக்க

    அடியார் விரும்பவும்

தங்குமிடம் விட்டே

    மரத்தில் ஒளிந்தநீ

மங்கல மாயொரே

    இல்லா ளுடனறமாய்

நங்கநல் லூர்வாழும்

    நான்காண லாகாதே

எங்கே ஒளிந்தாய்

    கூறு.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #25:

தங்கக் காசாயிரம்

    நீதர அத்தினமே

அங்கேயே கொள்ளாதே

    சுந்தர மூர்த்தியார்

அங்கோராற் றில்சேர்த்து

    ஆரூரில் ஏழெட்டுத்

திங்கள் கழித்துக்

    கமலா லயமெனும்

தங்குநீர் தங்கும்

    குளத்தில் பெறவிட்ட

சங்கரா தாயெனக்கும்

    பொற்காசு இத்தினமே

இங்கேயே கொள்ளுவேன்

    நான்.

ராலியின் வேண்வெண் முயற்சி #127:

உன்னை நினைந்தழுது

      உன்னடிமை நானென்று

சொன்ன அடியார்

      பலர்கண்டு நீசலித்தாய்

பொன்கொடு பெண்கொடு

      என்றடம் செய்திட்ட

வன்தொண்டர் சுந்தரர்

      செய்கை ரசித்தாய்நான்

பொன்பெண்மண் கேட்பேன்

      ரசி.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s