Sep 19, 2016

Rali:

சொந்தமே யானாலும்

    யாப்புப் பிழையுடன்

சந்தப் பிழையுடன்

    நானெழுதும் பாக்களை

மந்தமெ னாதே

    திருத்தும்நம் பீகேயார்

இந்தியா வந்தது

    நன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #19V2:

எமது கதையறிந்தும்

    எம்மை மறந்து

தமது கதையொன்றே

    எண்ணு முலகில்

யமனே மறவான்

    எனை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #20:

விறகு சுமந்து

    மமதை மயக்கத்

திறனுடன் பாடிய

    ஏமன் மயக்க

மறச்செய்த சுந்தரா

  நீயென் மயக்க

மறச்செய்ய வெண்ணா

    ததேன்?

 

BKR:

@SKC

வள்ளிக் கணவன் துணையிருக்க வாழ்வினிலே

முள்ளும் மலராய் முகிழ்க்காதோ – உள்ளளவும்

இன்பதுன்பம் யாவும் இறையருளென் றேற்றிடவே

என்றும்நே ராது தவிப்பு.

 

SKC:

@BKR

கள்ளம் நிறை வாழ்வை காதலித்து

உள்ளம் உவந்து பேதலிக்க – கொள்ளும்

சுகந் தன்னைத் துறக்க நித்தம்

குகன் தருவான் நமக்கருள்.

 

BKR:

@ராலி

இந்நாடோ மற்றுவே றென்னாட் டிருந்தாலும்

செந்தமிழே நம்மை இணைப்பதனால் – உந்தன்

கவியைத் திருத்துவதோ டன்றியதில் ஊறும்

சுவைகாண் பதுமென் கடன்.

 

SKC:

பரமனின் பாதம் பட்டது மங்கு

பரணியின் நாதன் அடைந்தனன் தெளிவும்

சிரமதில் பிறையும் சூடிய வேளை

சீரும் அடைந்தனன் ,சந்திரன் அவனும்

இடமவன் உமை கொண்டதும் உடன்

இணைபிரியா திருக்க அவளும்

விடையவன் பெருமை வியந்தே கண்டு

விழைந்தேன் நானும் வினை தீர்ந்திடவே.

 

SKC:

கொள்ளை இன்பம்

கொண்ட இவ்வாழ்வில்

பள்ளமொடு மேடு கண்டு

பரிதவிக்கும் மனிதருண்டு

எள்ளி நகையாட

இங்கு பலருண்டு

உள்ளமதில் சூது கொண்டு

ஒளித்து பிறர் முன்னே

கள்ளம் பயிலும்

கடுபிணியர் தாமுண்டு

முள்ளும் மலருமென

முடியும் இவ்வாழ்வில்

உள்ளத் துறு துயர்

ஒழித்தே மகிழ்ந்து

முள்ளதனை நீக்கி

முகிழ்த்த நல்மலரை

கொள்ளவே வேண்டி

குவலயந் தன்னில்

தெள்ளமு தார்ந்து

திளைக்க விழைந்து

வெள்ளெருக்கு வேந்தை

விரைந்து பணிவேன்.

 

ராலி க. நி. தெக்காலம்  #394

எரிந்து பின்னும்

    பிறந்து உலகில்

திரிந்து வினை

    கழித்துப் பின்னர்

சரியானதோர் இடம்

    சேர ஊரூர்பலி

திரிவானை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s