Sep 17, 2016

SKC:

ஐயா! நானுணர்ந்தேன்

அழியும் இவ்வாழ்வென்று

மெய்யாம் இவ்வுடலும்

மெய்யில்லை மேதினியில்

பொய்யாய் போகுமென

புரிந்தே நானிங்கு

உய்யவே உலகில்

உன்னை நினைத்திருக்க

ஐயாறு அப்பனே !

ஐங்கரன் தந்தையே! நான்

செய்யும் வெவ்வினைகள்

சீராய் ஒரு காலம்

பையவே தீருமென

பாடி உனைப் பணிந்தேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #17:

வரம்பெற் றசுரன்

    தலையில்கை வைக்க

அரனோ டியதுநன்

    றேயன்றே நான்பல்

சிரமத் துடன்பக்தி

    சேர்த்தவன் தாளில்

சிரம்சாய்க் கவரும்போ

    தென்குற்றம்  மற்றும்

தரங்குணம் கண்டோடு

    தல்.

 

ராலி க. நி. தெக்காலம்  #393

இடியிலும் வான்மழை

    யிலும் சேர்நதியிலும்

செடிகொடியிலும் கோல

    மயில் எழிலினிலும்

துடிக்கும் நெஞ்சினிலும்

    நடம்செய் விடைக்

கொடியானை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

SKC:

துள்ளித் திரிந்த வேளை

துடுக்கு அடக்கி

அள்ளியெனை அணைத்து

அன்பாய் என் அன்னை

பள்ளிக்கு அனுப்பி

பாடம்தனை புகட்ட

உள்ளம் உவகையுற

ஒரு சேரக் கற்று

தள்ளாமல் இன்பங்கள்

தரணியில் அனுபவித்து

கொள்ளும் சுகம் பல

கொண்டதனால் மகிழ்ந்து

முள்ளாம் இப்பிறவி

முழுவதும் தீர்த்து பின்

தள்ளாத வயதில்

தவித் திருக்காது

வள்ளிக் கணவனை

வணங்கி நான் பணிவேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #18:

படுத்துமேழ் மைநீங்க

    பக்தனுக்குப் பாடல்

கொடுத்துப் பரிசுவென்றுத்

    தந்தது மின்றி

தடுத்தநக் கீரனைக்

    கண்ணால் எரித்துக்

கடுத்த பரமனிங்கு

    நற்கவி நண்பர்

அடுக்குமொழி மன்னர்போல்

    இன்சொல் எனக்கும்

எடுத்துத் தருவதற்

    கென்ன?

 

பித்தன் 36.

மனமொன்று கொண்டு வந்தேன்

மணமொன்றுமில்லை

பணமேதான் வாழ்க்கையென்று

கணப்பொழுதில் கண்டுகொண்டேன்

வணங்காதபேர்களை நான்

வணங்கியே வாழ்ந்துவிட டேன்

வணங்க உனை நேரமின்றி

சுணக்கமாய் வாழுகின்றேன்

ஆதரித்து அருள்வாயாக

ஆடலரசே ஆரூரப்பா.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s