Sep 13, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #13:

கம்பனைப் போல்கவி

      பாடும் திறமுடன்

சம்பாதித் துக்கோடி

      கோடி குவித்தொரு

தெம்புடன் வீரமாய்

      வாழ்வதின் தெய்வத்து

நம்பிக்கை கொள்வது

      மேல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #14:

கல்விகேள்வி யில்புகழ்

      உள்ள மனிதரும்

செல்வவளம் பெற்று

      உயர்ந்த மனிதரும்

வல்லரை மாய்க்கும்

      வலிய மனிதரும்

பல்வித துன்பம்

    வருகையில் நம்பியே

செல்வது தெய்வசக்தி

      ஊறி வழிந்திடும்

கல்லினா லானவடி

      வாம்.

ராலி க. நி. தெக்காலம்  #387

தீர்த்தலே இலாத

    கர்மக் குவியலை

சேர்த்தல் இலாது

    முறையே வாழ்ந்து

பார்த்தலே கதியென

    மாமத மாவுரி

போர்த்தானை ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #388

மரமாயும் புல்லாயும்

    புள்ளாயும் பின்

குரங்காயும் விலங்காயும்

    மனிதனாய்ப் பல

தரமாய்ப் பிறப்பதறுக்க

    மறைகள் காணாப்

பரமனை ராலி

    பாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s