Sep 09, 2016

பித்தன் 27.

கன்னமிட்ட கள்வனே

எண்ணமதை நல்குவேன்

மின்னலென பாய்ந்து நீ

விண்ணுலகம் ஏகுவாய்

என்னுடலைத் தேடியே

சொந்தங்கள் யாவரும்

கண்ணீரைக் கூட்டியே

தண்ணீராய் மாற்றுவார்

என் சுமைகள் யாவையும்

நின்பாதம் தனில் ஏற்று

என்னுயிரை மீண்டும்

இன்னொருதாய் ஏற்காமல்

என்றென்றும் உன்னுடேன

என்னை நீ சேர்த்திடுவாய்

என் காயம் பெற்ற காயங்கள் போதுமினி

நின் மாயங்கள் நிறுத்தி

நின் பதம்தனை எனக்கு

பொன்மனம் கொண்ட

கண்ணா நீ நல்குவாய்

மின்னலென சோதனை

வேண்டாம் இனி

நின் பாதம் சரண் அடைந்தேன்

கண்ணா நீ வருவாயா.

 

பித்தன் 28.

விதையொன்றை

             தூவிவிட்டு

சிதையேறிச் சென்றார்

              என் தந்தை.

விதைதனை நிலமாக

     ஏற்று செழிப்பாக

     வளர்த்து உலகுக்கு

      தந்தாள் என் அன்னை

அவர்களுக்கு நான்

     அளிக்கும் வந்தனங்கள்

                                  கோடி

அவர்கள் எனக்களிக்கும்

     ஆசிகளோ பலகோடி.

பித்தன் 29.

சலங்கை குலுங்கும்போது

சங்கடங்கள் ஏதுமில்ல

வளையல் குலுங்கும்போது

வேதனைகள் தொடங்கிவிடும்

உடல் குலுங்கும்போது

உறவுகள் புரிந்துவிடும்

மனம் குலுங்கும்போது

மந்திரமே துணைநிற்கும்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s