மாணிக்கவாசகர்

Rali:

நரியைப் பரியாக்கி

    மாணிக்கர் நெஞ்சைப்

பரிந்துகாத் திட்டபிரான்

    என்மனத் துள்ள

கரியைச் சரியாக்கி

    தெய்வத்துப் பாடல்

வரியாக்க வேண்டு

    கிறேன்

ராலியின் வேண்வெண் முயற்சி #157:

நரியைப் பரியாக்கிக்

      காத்தபின் நீயேன்

பரியை நரியாக்கி

      வெஞ்சிறை இட்டாய்

புரியவில்லை உன்செயல்

      ஈசா.

BKR:

வாசகர்க் கோருதவி செய்தாலும் பாண்டிய

தேசத்தைக் கைவிடல் ஆகாதென்- றீசன்

நரியைப் பரியாக்கி னாலும் அவரைச்

சரியாய்த்தான் வைத்தான் சிறை.

 

BKR:

எம்பிரானுக் காலயம் கட்டிடினும் தன்னையே

நம்பியவர் ஏமாறச் செய்ததனால் – வம்பாய்

அசுவத்தை மீண்டும் நரியாக்கிற் றந்த

விசுவன் விதித்த விதி.

 

Rali:

@BKR:

புரியவில்லை என்றுதான்

      கேட்டேன்நான் நண்பா

பரிநரி ஆக்கிய

      மோசடியா ளுக்கு

வரிந்துகட்டும் உன்பதில்

      நன்று!

BKR:

புரியா தெளிதில் அவன்செய்கை ஆனால்

சரியல்ல தாகாதெந் நாளும் –  பரிவுக்கும்

நீதிக்கும் பாதியிடம் தந்தவன்தான் மங்கைக்குப்

பாதியுடல் தந்த சிவன்.

(மணிவாசகர்க்குப் பரிவு  –  மன்னர்க்கு நீதி)

 

Rali:

@BKR!

பரியாக ஆக்கியோ

      ஆயிற்று என்று

பரியாய் அவைகளை

      விட்டு இருந்தால்

தெரிந்து இருக்காதே

      எல்லாமே அங்கே

சரியாய் இருந்திருக்

      கும்!

 

BKR:

சொந்தமில்லாக் காசுகொண்டு கோவில் எழுப்புவது

எந்த விதத்தில் சரி?

 

Rali:

@BKR:

அந்தப் பணம்வரியாய்

      மக்கள் அரசுக்குத்

தந்த பணமென்றே

      மக்களுக் காய்க்கட்டித்

தந்தார் அவரந்தக்

      கோயில்

BKR:

கோவில் எழுப்பிடச் செல்வம் அவரந்தக்

கோவிடமே கேட்டல் முறையன்றோ?  – பாவம்

குதிரைக்காய்த் தந்தபணம் கோவிலுக்கென் றாயின்

பதறாதோ மன்னன் மனம்?

 

VKR:

நரியாகும் பரியாகும் மாந்தர்தம் உள்ளம்

பரியாகும் பொதுநலம் நாடில் – மீண்டும்

நரியாகும் பிறர் பொருளை வீழின் இதையே

சரியாக அறிவோம் நாம்

 

SKC:

உரிமையே இல்லாத

இன்னொருவர் பொருள் கொண்டு

சரியில்லை பூசித்தல்

சகத்தினில் எனில் உலகின்

பொருளெதுவும் நமதில்லை யிங்கு.

 

BKR:

@SKC:

கடைத்தெடுத்த உண்மையீ தென்றாலும் பாரில்

கடைத்தேங்காய் கொண்டுகணே சர்க்கு – உடைப்பவனை

ஊரார் உதைத்திடுவர் உன்கூற் றுயர்ந்ததாம்

வேறோர் தளத்திற் பொருந்தும்.

 

SKC:

@BKR

அப்பொருள் நான் கொண்டேன்

ஆயினும் தன் தொண்டன்

எப்பொருளும் எனதன்று

என்றே மனத்தெண்ணி

இப்படிச் செய்தல்

இயலுமென் றீசன்

தப்பெனக் கொள்வரோ

தான்.

Rali:

முதுமறையோன் கோயில்

      எழுப்பவதின் ஏதும்

பொதுநல எண்ணமுண்டோ?

      துன்பத்தில் வாடும்

பொதுமக்கள் போய்முறையிட்

      டுத்துயர் தீர்க்க

இதுபோலே தும்வழி

      உண்டோ?

 

BKR: @SKC

நரிபரி யான தருட்செயலே ஆனால்

பரியைநரி ஆக்கியதேன் என்னில்  – சரியேதான்

அச்செயலும் என்பதனால் தானே அடியாரும்

இச்சையுடன் சென்றார் சிறை?

 

SKC:

@BKR

பரியோ நரியோ

உரியோன் ஒருவன்

சரியோ தவறோ

அறியார் எவரும்

விரியும் சடையோன்

விளையாடலிலே

கரையும் மனமும்

கதியானதுவே.

 

 

VKR:

(நரியை பரியாக மாற்றிக் கொடுத்த ஈசனுக்கு ஒரு வேண்டுகோள் -ஒரு சமகாலக் குறிப்புடன்)

கோவிலென்றும குளமெனறும் பலசொல்லி கோடிகளை

வாரிக்குவித்து தமக்கென்று வாழ்ந்தவர்கள்

போற்றிடினும் பூமலர் சாற்றிடினும் பழங்காசை

மாற்றித் தராதே ஈசா.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #159:

உருகாதார் இல்லாத

      மாணிக்கர் பாடல்

திருவா சகம்கேட்டும்

      கல்லாமுன்  னுள்ளம்

உருகாது இட்டாய்

      சிறை.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #183:

மன்னன் திருவாத வூரரை மற்றவர்

சொன்னது கேட்டுச் சிறையிலிட வைகைக்

கரையடங்கா வெள்ளம் கொடுத்து அவர்க்கு

வரையிலா அன்பைத்தந் தாய்.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s