Sep 03, 2016 – Pillaiyar Chaturti

Rali:

ராலியின் வேண்வெண் முயற்சி #8:

வானவரும் போற்றும்

      பழனியை ஆக்கவென

ஞானப் பழம்வேண்டி

      தாய்தந்தை யாமிருவர்

ஆனதுல கென்று

      பழம்வென்று தன்மயிலில்

போனச்சின் னத்தம்பி

      யைச்சீண் டியுட்களிப்

பானபிள் ளையார்

      சதுர்த்தி.

 

SKC:

ஆர்த்த இப்பிறவியில்

அல்லல் களைந்து

காத்தவன் கரிமுகன்

கணபதி அவன்

மூத்தவன் அக்கனி

முன்னர் தன்வசம்

சேர்த்தவன் எமது

சிந்தை நிறைந்தவன்

தீர்த்தக் கரையில்

தினம் அமர்ந்து எமை

ஈர்த்தவன் குறுமுனி

கொணர் நீர் கரை

சேர்த்தவன் தசமுகன்

சோதரனை அங்கு

ஏய்த்தவன் அரங்கனை

எமக்களித்து வினை

தீர்த்தவன் தன்னை

தினம் பணிவோமே!

 

மஞ்சள் பிடித்தும்

மண்ணில் வடித்தும்

நெஞ்சில் நினைத்தும்

நிதமும் துதித்தும்

மிஞ்சும் மோகம்

முழுவதும் ஒழித்தும்

கொஞ்சும் குறுநகை

கொண்ட தலைவனை வள்ளி

அஞ்சி நடுங்கிய

ஆனை முகனை

விஞ்சும் வித்தக

வேத நாயகனை

தஞ்சம் அடைந்தேன்

தரணியில் நானே!

 

Rali:

ராலியின் வேண்வெண் முயற்சி #9:

தினைகாத்த அவ்வள்ளி

      யையேய்த்துக் காதல்

மனையாளாய்த் தம்பிகொள்ள

      வேண்ட மகிழ்ந்து

முனைந்தொரு யானையாய்

      வந்து அவன்மார்

பினைத்தழுவச் செய்த

      முழுமுத லாமப்

பனைத்தொழும்பிள் ளையார்

      சதுர்த்தி.

 

பித்தன் 22:

சக்கரத்தைக் கெடுத்து

ஸதிராடி சக்கரத்தை

திரும்பப்பெற்ற

சக்கரத்தாழ்வார

மருமகனை சதுர்த்தியன்று

வழிபடுவோம்

 

பித்தன் 23:

கல்லாலடியிலமர்ந்த

கனகஸபேசனின்

பிள்ளையை நாம்

மண்ணால் பிடித்து

சதுர்த்தியன்று

வழிபடுவோம்

 

பித்தன் 24:

வேல் வாங்கிய

வேலனைக்கும் புலி

பால் கொணர்ந்த

ஐயனுக்கும்

நல் அண்ணனான

கணபதியை நாம்

சதுர்த்தியன்று

வழிபடுவோம்

 

SKC:

ஆனைக்கா அருகில் திரு

அரங்கமதன் எதிரில்

மீன் அக்காவிரி துள்ள மலை

மேட்டில் அமர்ந்தவனை பெண்

மானைக் காதல் கொண்ட

மயிலோன் நாடி வேண்ட தேவ

சேனைக் காவலன் தமையன்

சித்தி தரும் கணநாதன்

ஆனைக் கோலம் கொள்ள

அக்குற மகளும் அஞ்சி

நாணிக் குமரன் தோளை

நடுங்கியே தழுவ

நானக் காதை இங்கே

நாளும் தினம் கேட்டு இவன்

ஆனைக் காதில் சென்று

அழுது புலம்பி எந்தன்

ஊனக் கண் திறக்க

உள்ளம் உருகி நின்று அவன்

காணக் கண்ணீர் மல்கி

கணபதியை சரண் பணிவேன்!

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s