ராலியின் வேண்வெண் முயற்சி #2:
காரமினிப் புக்கொழுப்
புத்தவிர்த்து நாளிலுள்ள
நேரமெல்லாம் ஊர்ச்சேதி
வம்பென்று தன்விதிபோல்
ஓரமாய்ப் பிள்ளைவீட்
டில்வேலை யாளாக
பாரமாய் வாழ்வதற்குத்
தானாய்த் தனியாக
ஈரமான நெஞ்சுடைய
தெய்வத்தின் தாள்தனை
சேருதல் ஒன்றே
சிறப்பு.
Advertisements