Pithan – Aug 26, 2016

பித்தன் 18.

நம் வாழ்வில் நாம்

வந்த இடம் தெரியாது

போகுமிடம் புரியாது

நடுவினிலே நாடகத்தில்

ஆடுகிறோம் பாடுகிறோம்

கூடுகிறோம் கொஞ்சுகறோம்

நஞ்சுண்ட நாயகனை

கெஞ்சி நாம் அழைத்திட்டால்

பஞ்சு மனம் கொண்ட

பரமன் பக்கத்தில்

காத்திருப்பான் பரம

ஸத்தியமிது பதறாமல்

வாழ்ந்திடுவோம்.

 

பித்தன் 19.

கோகுலத்தில் சலங்கை

கட்டி குழந்தையாக

குழலூதிநின்ற கண்ணன்

போர்க்களத்தில்

பார்த்தனக்கு ஸாரதியாய்

சங்கு ஊதி நின்றான்

அவனை குழந்தை

என்பதா இல்லை கடவுள்

என்பதா?

கோகுலத்தில் வீடுகளில்

வெண்ணைதனை

திருடித்தின்ற கண்ணன்

போர்க்களத்தில்

கர்ணனிடம் புண்ணியத்தை

பரித்து நின்றான் அவனை

கண்ணன் என்பதா இல்லை கள்வன் என்பதா.

குருவினிடம் கலைகளையும் பாடம்

கேட்ட கண்ணன்

பார்த்தனக்கு கீதையை

பாடமாக தந்தான் அவனை

சீடன் என்பதா குருநாதன்

என்பதா நீ எந்த வேடம்

அணிந்தாலும் சொந்தமுடன் எந்தனுக்கு

வந்தருள் புரிந்திடுவாய்

கமலக்கண்ணா.

 

பித்தன் 20.

நாய் வேடம் கொண்டு

வந்தேன் குறைக்க

மனமில்லை பேய்வேடம்

புனைந்துவந்தேன்

மரத்தில் ஏற மனமில்லை

தாய்வேடம் ஏற்றுவந்தேன்

சேயைப்பிரிய மனமில்லை

சேய்வேடம் கலைந்தபின்னர் தாயை

ஏற்க மனமில்லை.

வேடங்கள் முடிந்தபின்னர்

காலனின் கயிறை ஏற்க

மனமில்லை. காலனுக்கே

காலனான அமுதகடேசனின் துணை

இருந்தால் கைலாயத்தை

கணப்பொழுதில்

எட்டிடலாம் கவலைவேண்டாம்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s