SKC – Aug 23, 2016

பச்சை உடை உடுத்தி

பரிமேல் அழகனாய்

இச்சையுடன் தங்கை

எழில்மிகு மணக்கோலம்

மெச்சவே எண்ணி

மின்னலாய் விரைய

அச்சிறு பெண்ணவள்

அதனுள் மணமுடிக்க

அச்சம்பவம் கண்டு

அளவிலாத் துயரும்

உச்சமாய் சினமும்

உள்ளே துளிர்க்க

துச்சமெனத் திரும்பிய

தூயனே! மாலவா!

அச்சுதா! அழகனே!

அனைத்துமே நீயென தலை

உச்சிமேல் கரம் கொண்டு

உனைப் பணிந்தேனே!

பண்டரி புரத்தானின்

பரந்த தோள் கண்டு

வண்டு ஊதும் சங்கில்

வயப்பட்ட மலரைக்

கொண்டங்கு கோதை

கோர்த்ததோர் மாலை

கண்டதனை ஏற்று

களிப்பித்த மாலை

மண்டூக முனியும்

மருகியே துதிக்க மலர்

செண்டாடும் கரத்தால்

சங்கடம் தீர்த்து இவர்

உண்டதோர் மண்ணே

உலகமும் காண

அண்டம் தன் வாயில்

அன்னைக்கு காட்டி ஆட்

கொண்ட திருமாலை

கூடிக் களித்து

கொண்டாடும் வேளை

கோகுலத்தில் நாளை அவன்

வெண்டாமரைப் பாதம்

வீழ்ந்து பணிவேனே!

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s