SKC – Aug 02, 2016

மரவுரி தரித்து போரில்

மனைவியை மீட்க வேண்டி

விரலிடை வில்லை ஏந்தி

வீணரை வதைத்த ராமன்

உரல் இடை கொண்டங்கு

உயர் மரம் சாய்த்த மாயன்

விரலிடை குன்று தாங்கி

விரைந் தருள்செய் சேயன்

உருவுமுடை ஓயாது பஞ்சவர்

உற்றவளைக் காத்த சீலன்

விரலுடை சக்கரத்தால்

வெங்களிறு காத்த மாலன்

இருள் இடை கூடைதன்னில்

இடமது பெயர்ந்த பாலன்

விரல்தனில் தேர் அழுத்தி கர்ணன்

விடுகணை தவிர்த்த தோழன்

விரலிடை வேய்ங் குழல் ஏந்தி

விண்ணவரும் வியந்த கோபன்

அரவு இடை மலை வைத்து

அலை கடலைக் கடைய

வரும் திருமகள் ஏற்று

வரமருள் அரங்கன் தன்னை

மருகியே நிதமும்

மனதில் நினைத்திலனே!

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s