Sathish – Aug 01, 2016

முன்னொரு யுகந்தன்னில்

முயற்சிகள் பல கொண்டும் ;

படைப்பவன் கண்டிலன்

காப்பவன் கண்டதாய் விண்டிலன் ;

கோரக் கடும் கலியதனில்

மாணுடன் இவனுக்கும்

சுகமொன்று

ரகசியமாய் உண்டென்று அறிந்தவன் ;

செப்புவன் சிவா என்ற திருநாமம்

உணர்வன் ஆதி அந்த மற்ற பரம்பொருளை

அன்பான கண் மணியே!!

 

மணி வாசகம் – 2

 

மதுரைக்கு மருதை என்பர்

மீனாட்சியை தினமொருமுறையேனும் காண்பர்

மாற்றாக படிப்பறிவில்லை என்போம் ;

 

காஞ்சியிலே கால்வயிறு கஞ்சிக்கு வழியில்லை என்பர்

காமாட்சிக்கு அரை முழம் பூ கொடுப்பர்

பகட்டாக பரம ஏழை என்போம் ;

 

காசியிலே ப்ரேதக்கால் தள்ளி நீரிலே விடுவர்

விசாலத்தை மும்முறை வலம் வருவர்

வீச்சாக வெட்டியான் என்போம் ;

 

பட்டினத்தில் பறக்கும் நம்மை நாமே

எல்லாம் தெரிந்த ஏகாதிபத்யன் என்போம்

பணத்தின் பின்னால் நடை பிணமாய் அலையும்

நம்மை எப்படி விவரிப்பது

பொன்மணியே!!

 

மணி வாசகம் – 3

 

அம்பலத்திற்கு செல்வோம் என்றான் மணாளன்

கேளிக்கைக்கு போவோம் என்றாள் மனையாள்

கடவுள் பக்தி அவசியம் என்றான்

கிடக்கட்டும் இன்னும் வயதாகட்டும் என்றாள்

அலை ஓய்ந்து ஸ்நானம் ஆகாதே என்றான்

வயது போனால் வராதே என்றாள்

திண்ணையிலிருந்த குட்டிக் கண்ணன் குரலெழுப்பினான்

பிராயம் மிகுமே சோகம் மிகுமே

பின் முன் எலும்புகள் வளையுந்திடுமே

பேசும் நாவிற் குளறல் பெருகுமே

முத்தேவியரை மனம் நினைக்கும்

வேறு தேவியை நா அழைக்கும்

அழைத்தவர் வருவர் அனாயாஸமாய்

செப்புவதை கேள் செல்வ கண்மணி

அப்போதைக்கு இப்பொழுதே கூவி

அழைத்திடு அன்பான அரங்கனை

என் பறை அல்ல இது

ஆண்டாள் தகப்பன் செதுக்கிய கூற்று.

 

மணி வாசகம் – 4

கோபிகை ஒருத்தி கலி பிறவியெடுத்தாள்

கண்ணன் இருக்கும் இடம் தேடி நடித்தாள்

காந்தாரி சாபம் அரிந்தனளோ அவள்

யாதவ குலமே அழிந்தென சொல்

பார்வயாலே ஏளனமாய் மூடனாக்கினாள்

பரத்திற்கு ஏது அழிவுண்டோ என்றாள்

கலி கொண்ட மாயை மாயன் மறைந்தான்

செவிகொண்டு கேட்டேன் வேணுகானம் பொழிந்தான்

அடடா ! எங்கு போய் தேடுவேன் அந்த குஞ்சு பாதத்தை

கோபிகையை வேண்டினேன் காட்டவனை இக்கணமென்று

கண்மூடி பக்தியுடன் அன்பாக அழைத்துப்பார்

கணப்பொழுதில் தென்படுவான் உன்னுள் என்றாள்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s