Rali – Jul 29, 2016

ராலி க. நி. தெக்காலம்  #337

நெஞ்சின் உள்ளே கழுவி

    சுத்தம் செய்ய

அஞ்செட்டு நாற்பது வேத

    விதிகளைச் செய்து

வஞ்சமிலாது மனம் நிறைந்து

     பக்தி பண்ண

குஞ்சிதபாதனை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #338

ஏடு பல படித்து

    உண்மைப் பொருளைத்

தேடும் வழி அறியவே

    நன்றாய் முயன்று

காடு செல்லாமலே

    கதிபெற ராலி நட்டம்

ஆடும் நம்பனை

    நம்புவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #339

வாயென்றும் செவியென்றும்

    கருவி தந்து

தீயது நல்லது அறியும் திறம்

    தந்து அன்புத்

தாயென பரிந்து வழிகாட்டும்

    முப்புரம்

தீயெழச் செய்தானை ராலி

    தேடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s