ராலி க. நி. தெக்காலம் #362
பதினாறும் பெற்று
வாழ வாழ்த்தி
விதிதரும் துயர் யாவும்
களைந்து நல்
கதிகாட்டும் மேலோரை
நாட ராலி
முதிராமதி சூடுவானை
சேவிப்ப தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #363
சேர்த்த வினையாவும்
கழித்து நடுவே நல்
வார்த்தை சில கேட்டு
அதன் பயனாய்
ஈர்த்து நல்லோரிடம்
சேர பாம்பு அரை
ஆர்த்த பரமனை ராலி
பாடுவ தெக்காலம்?
Advertisements