காலையில் துயிலெழுந்து

Pithan:

காலையில் துயிலெழுந்து

மேலே உள்ள இரண்டு சொற்களைத்தொடர்ந்து

நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு கவிதை புனையலாமா?

 

Rali:

காலைத் துயிலெழு

       வோம்பின்னே காப்பியைப்

பாலைக் கலந்தருந்து

       வோம்.

 

Rali:

காலைத் துயிலெழு

    வோம்நேர மானதால்

சாலை விதிதுறந்து

    பேய்போல் விரைந்தோடி

வேலை இடஞ்சேர்வோம்

    ஏதேதோ செய்தபின்

மாலை அகஞ்சேர்வோ

    மென்றே இருந்தால்

நூலைப் படிப்பது ஏது?

 

SKC:

காலையில் எழுந்து

காத தூரம் நிதமும்

சாலையில் நடந்து உடல்

சதையினைக் குறைத்து

கோலமிடும் மனையாளை

கொஞ்சம் வருத்தி

காலை உணவைக்

கடுகளவு அருந்தி

ஓலமிடும் வண்டியை

உருட்டியே சென்று

வேலையிடம் சென்று

விரைந்து பணி முடிக்க

கோலமயில் முருகா!

கொஞ்சம் நீ அருள்வாய்!

Rali:

காலை எழுதல்

    சிறப்பதனின் நன்றுகாண்

மேலை யுலகுசெல்

    லாமல் மறுநாளும்

காலை எழுதல்

    சிறப்பு.

SKC:

காலையில் துயிலெழுந்து

அம்பிகையின் திருவடியில்

பதியாத மனமுண்டோ

பாரில் எந்நாளும்

கதி வேறு எனக்கில்லை

காமாட்சித் தாயே! என்

விதி மாற்றி அருள்வாய்

வேண்டி உனைப் பணிந்தேன்

SKC:

வேலை இல்லாமல்

வீட்டினில் ஓய்வெடுத்து அதி

காலை எழுதல்

அதனினும் சிறப்பு

BKR:

காலைத் துயிலெழுந்து

       நெஞ்சில் கணமேனும்

நீலமிடற் றானை

   நினைந்திடுவோம் –

                             தூலவுடல்

தூங்குவதும் தூக்கமது

        நீளா ததிகாலை

நீங்குவதும் ஈசனருள் தான்

 

SKC:

காலைத் துயிலைக்

கலைக்க மனமின்றி

வேலையே பொழுதை

வீணாய்க் கழித்தலென்று –

                      ஞாலத்தில்

மீளாத் துயில் கொள்ள

மோகித்து இவ்வாழ்வை

நாளாய்க் கடத்துவோம் நாம்.

 

Pithan:

காலையில் துயிலெழுந்து

கடன்களை முடித்து

காலாற நடந்து

பணிகளைக்கடந்நு

சின்னத்திரை முன்னமர்ந்து

சிற்றுணவை கைக்கொண்டு

வாயாற வம்பதனைப்பேசி

துயிலேகும் மானிடர்காள்

வயலூரானையும்

அவன் தந்தை

வைத்யநாதனையும்

வணங்குவதெக்காலம்

 

Suresh:

காலைத் துயிலெழுந்தே

கவிபாடக் கருதேடி

வேலைப் பாடுவனோயன்றி

வேலவன்றன் மாமன்

மாலைப் பாடுவனோவெனத்

தேறாத உள்ளத்து மான்

தோலை அரைக்கிசைத்து

மதுரைத் தென்கூடலிலே

லீலைபலபுரிந்தான்

குளக்கரையில் குழவிக்குப்

பாலைநினைந்தூட்டி

பலகவிகள் பாடவைத்தான்

ஆலையுண்டமர்ந்தவென்

அண்ணலைப் பணிந்தேத்தும்

சாலைதனையறியாது

இச்சகடமும் பயணிக்க

சேலைச்செவ்வானில்

சந்திரரும் சிரித்துவர

மாலைமதன்வரவால்

மதிமயங்கித் துயில்கொண்டேன்.

SKC:
@suresh

காலையில் துவங்கி

மாலையில் மயங்கிய கவிதை

மாலையினைத் தொடுத்து

மகிழ்வித்த சோதரனே!

ஆலையில் கரும்பாய்

அமிர்தத்தைப் பிழிந்து மனப்

பாலையில் நீர் தந்த

பாவலனே நீ வாழி!

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s