Rali – Jul 22, 2016

ராலி க. நி. தெக்காலம்  #319

ஆறஅமர மனம்குவிந்து

    எண்ணும் எண்ணம்

மாற விடாது நற்சொல்

    லிலும் பக்தியிலும்

ஊற வைக்கும் உயர்ந்த

    உறவுதர தூவெள்ளை

நீறணிவானை ராலி

    நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #320

தேடுவது உண்மைப்

    பொருளாக வேண்டும்

நாடுவது நல்லோர்

    உறவாக வேண்டும்

ஈடுஇணையிலா ஈசனே

    என்று அரையில்

ஆடுபாம்பணிவானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #321

குடத்துள் விளக்காய்

    ஒளிரும் மேன்மக்கள்

தடத்தில் நடந்து பொய்

    யகற்றி இருளான

இடத்தில் விளக்கேற்றி

    வாழ ராலி கறையணி

மிடறுடை மைந்தனை

    மெச்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s