ராலி க. நி. தெக்காலம் #307
நரை தட்டி நடுங்கிக்
கிடந்து சாகும்
வரை இராது இன்றே
நல்வழி காட்டும்
உரை தருவோர் உறவு
நாட புலி உரி
அரையோனை ராலி
அண்டுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #308
ஏழ் பிறவிக்கும்
இங்கே பிறந்து
ஆழ் கடல் முத்தனைய
நற்சொல் பேசி
ஊழ்வினைபோக்கும்
உத்தமரை நாட
தாழ்சடையனை ராலி
துதிப்ப தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #309
தேடிய செல்வம் எதுவும்
நிலையாது பல்திசை
ஓடிப் பார்த்தும் மெய்ச்சுக
மென்பது அறியாது
ஆடி அடங்கி நல்லோரைச்
சேர பாதி மாதொரு
கூடிய கூத்தனை ராலி
கும்பிடுவ தெக்காலம்?
Advertisements